click me

Sunday, August 26, 2012

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 115 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் மற்றும், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 23ம் திகதி தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 438 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சிஸில் நியூசிலாந்து அணி 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பாலோஆன் பெற்றது. இந்நிலையில் இன்று நடக்கவிருந்த 4ம் நாள் ஆட்டம் தொடர் மழையால் தாமதமாகியது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 164 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக அஸ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட் வீதம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 31ம் திகதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment