click me

Wednesday, August 29, 2012

அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில்;Isaac என்ற பெரும் புயலால் விமான பயணங்கள் ரத்து


pyal_28_8
Isaac என்ற பெரும் புயல் தென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் விமானங்கள் சிலவற்றை ரத்து செய்தும், சிலவற்றை நேர மாறுதலுக்கு உட்படுத்தியும் உள்ளன.பயணிகள் அனைவரும் தங்கள் பயணத்தை தொடங்கும் முன்னர், நேர மாறுதலை கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  அமெரிக்க மற்றும் கனடாவில் உள்ள வெளியுறவு செயலகங்கள் தங்கள் நாட்டு மக்களை மிகவும் அத்தியாவசிய காரணங்கள் இருந்தால்மட்டும், விமான பயணத்தை மேற்கொள்ளுமாறும், இல்லையென்றால், புயல் கரையைக் கடக்கும்வரை விமானங்களில் செல்வதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மெக்சிகோ வளைகுடாவில், Morgan City, La., to Indian Pass, Fla. போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணங்களை கண்டிப்பாக தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
Miami, Fort Lauderdale and Fort Myers in Florida, போன்ற நகரங்களுக்கு செல்லும் West Jet விமானங்களும், Cuba, Jamaica, Miami, Fort Lauderdale and New Orleans போன்ற இடங்களுக்கு செல்லும் ஏர் கனடா விமானங்களும் புயல் நிலைமையை அனுசரித்தே கிளம்பும் என அந்த நிறுவங்கள் தெரிவித்துள்ளன.  மியாமி மற்றும் பியர்சன் நகரங்களுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ஞாயிறு அன்று ரத்து செய்யப்பட்டன. ஏர் கனடா பயணிகள் தங்கள் பயண திட்டத்தை மாற்றுவதற்கு அதிகப்படியான எவ்வித கட்டணமும் வசூலிக்காது எனவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment