சென்னை, ஆக., 20 : இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு கைகளில் மெகந்தி என்ற மருதாணியை வைத்த பெண்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்பட்டதாக வதந்தி பரவியது. ஒரு சிலருக்கு ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தாலும் கூட, அவர்கள் மெகந்தி வைத்ததேக் காரணம் என சந்தேகித்தனர். இந்த நிலையில், இது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவலை பரப்பினர். இதனால் மெகந்தி வைத்தால் அலர்ஜி ஏற்படுவதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வதந்தி பரவியது. இதனால் மெகந்தி வைத்த பல பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இது வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டாலும், மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment