தற்போது சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றது.
அமெரிக்கா தனது நாட்டில் இருந்து கொண்டே ஆப்கானில் ஆளில்லா உளவு விமானங்களை கண்காணிக்க விட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் இதில் இணைய உள்ளது.
இதற்காக 20 விமானங்களை சப்ளை செய்ய இராணுவம் சர்வதேச அளவில் டெண்டரை வெளியிட்டுள்ளது.
10 கிலோவுக்கும் குறைவான எடையுடன் கூடியதாக, 1,000 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியவையாக இந்த விமானங்கள் இருக்க வேண்டும் என்று அந்த டெண்டரில் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தரையிலிருந்து வானில் கிளம்பி தொடர்ந்து 1 மணி நேரமாவது அது பறக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காட்டுப் பகுதிகளில் நக்ஸல்களைக் கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்த மத்தியப் படைகள் திட்டமிட்டுள்ளன. |
No comments:
Post a Comment