ஒருநாள் கிரிக்கெட்டில் வெகு விரைவாக 3,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார் தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா.
57 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் 3031 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், 69 ஒருநாள் ஆட்டங்களில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
வீரட் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் இப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மேற்கிந்தியத் தீவுகளின் கார்டன் கிரினிட்ஜ் ஆகியோர் 72 ஆட்டங்களில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்து 3-வது இடத்தில் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 124 பந்துகளில் 150 ஓட்டங்களை(16 பவுண்டரிகள்) ஆம்லா எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அவரது அதிகபட்ச ஓட்டமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டமும் இதுதான்.


No comments:
Post a Comment