சிதம்பரம் நீதிமன்றத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆஜர்!
சிதம்பரம், ஆக.30: சட்டப்பேரவை தேர்தல் குறித்த வழக்கு ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இருவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமினில் வெளிவந்தனர்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கடந்த 11-4-2011 அன்று தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கூட்டணியில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலைநகர் தபால்நிலையம் முன்பு வாரப்பத்திரிகைகள் 5ஆயிரம் பிரதிகளை இலவசமாக விநியோகித்ததாக மூமுக தலைமை நிலையச் செயலாளர் ஜி.செல்வராஜ் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன், கோவி மணிவண்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை சிதம்பரம் நடுவர்-1 நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஆஜராக கே.பாலகிருஷ்ணன், கோவி.மணிவண்ணன் ஆகியோருக்கு நீதிமன்றம் வாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து மேற்கண்ட இருவரும் சிதம்பரம் நடுவர்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment