ஓசூரில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் கிராமத்தை நெறுங்கியபோது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் இறந்தார். 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
No comments:
Post a Comment