click me

Saturday, August 25, 2012

கன மழைக்கு 33 பேர் பலி: நிவாரணப்பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு 33 பேர் பலியாகியுள்ளனர்.
வட மாநிலமான ராஜஸ்தானில் உள்ள சிகார், சுரு, தோல்பூர், பாரத்பூர், கரோலி மற்றும் தவுசா போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
கன மழையின் தாக்கத்தால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஜெய்ப்பூரில் பெய்த தொடர்ச்சியான கனமழையில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிகார், பில்வார் மற்றும் சுரு மாவட்டங்களில் தலா மூன்று பேரும், பரத்பூர், தவுசா அல்வார் மற்றும் தோல்பூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 33 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் ரூ.1.50 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment