சீனாவில் பயணிகள் பேருந்து ஒன்று இரசாயனம் ஏற்றி வந்த லொரி மீது மோதிய விபத்தில் 36 பேர் உடல் கருகி பலியாயினர்.
சீனாவின் வடக்கே ஷான்ஜி மாகாணத்தில் இருந்து இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று 50 பேருடன் சென்று கொண்டிருந்தது.
இப்பேருந்து யானான் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணியளவில் வந்து கொண்டிருந்த போது மெத்தனால் என்ற ரசாயனப்பொருளை ஏற்றி சென்ற லொரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்து நடந்த நொடியில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 36 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments:
Post a Comment