தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தகவல் பரவலாக வெளியானதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை பிறந்த குழந்தை ஒன்று திடிரென சிரித்து பின் பேசியதாம். அக்குழந்தை பேசியதாவது, அதிகாலை 4 மணியளவில் இறந்து விடுவேன்.
அதற்குள் 4000 குழந்தைகளை பலி வாங்குவேன் என தெரிவித்ததாக இந்த தகவல் செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது.
மேலும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமானால் தேங்காய் வாங்கி மஞ்சள் குங்குமம் தடவி, தலையை சுற்றி முச்சந்தியில் உடைக்க வேண்டும்.
இந்த பரிகாரம் செய்தால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து வராது எனவும் தகவல் வெளியானது.
இதையடுத்து பெற்றோர்கள் தேங்காய் உடைக்க ஆரம்பித்திருக்கின்றனர். தேங்காய் விற்பனை அதிகமானதையடுத்து இம்மாவட்டங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அசாம் கலவரத்தை அடுத்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்படலாம் என்று வதந்தி பரவியதால் தென் மாநிலங்களில் பணியாற்றிய வட மாநிலத்தவர்கள் ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரம்ஜான் பெருநாளில் யாரும் மெகந்தி வைக்க வேண்டாம் என வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இந்த குழந்தை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
No comments:
Post a Comment