
ஹெல்மண்ட் பிராந்தியத்தின் மூஸா கலா மாவட்டத்தில் சாலையோரத்திலிருந்து 2 பெண்களும் 15 ஆண்களுமாக 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இச்சடலங்கள் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்டோ அல்லது குரல்வளை அறுக்கப்பட்டோ கிடந்தன. சில சடலங்களில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும், துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களும் இருந்தன.
இப்பகுதி தாலிபான்களின் பிடியில் உள்ள இடம் என்பதால் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் மந்தமாகத்தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன.அப்பகுதி பெண்கள் இருவர் யாருக்கு சொந்தம் என்று இரண்டு தாலிபான் தளபதிகள் இடையில் ஏற்பட்ட தகராறு இந்தக் கொடூரமான வன்முறையில் முடிந்தது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் ஆட்டம் பாட்டம் என கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு தாலிபான் தளபதிகள் வெறித்தனமாக வழங்கிய தண்டனையின் விளைவு இது எறும் வேறு சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த வெறிச் செயல் தாலிபான்களின் கைங்கரியம்தான் என்பதைத் தன்னால் உறுதி செய்ய முடியும் என ஹெல்மண்ட் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து பழகுவதை தாலிபான்கள் அனுமதிப்பதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காபுல் நகரில் உள்ள பிபிசி முகவரோ, உள்ளூர் அரசாங்கத்துக்கு வேலைபார்த்த காரணத்தால் இவர்கள் இலக்குவைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று சில செய்திகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment