பரங்கிப்பேட்டை: குட்டி யானை விபத்து
பரங்கிப்பேட்டை: நேற்று இரவு பெரிய தெருவில், வேகமாய் வந்த குட்டி யானை எனப்படும் மினி ட்ரக் நிலை தடுமாறி மின்கம்பத்தின் மீது மோதி சாய்ந்தது. இந்த வாகனத்தின் ஓட்டுநர் குடிபோதையில் வேகமாக வந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த விபத்தில் மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் வளைந்துள்ளது. ஓட்டி வந்த வாகனமும் முழுதாய் சாய்ந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாய் ஓட்டுநருக்கு சிறு காயம்கூட ஏற்படாமல் தப்பித்தார்.
இந்த விபத்து நடந்தவுடன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கூடிவிட்டனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இதனால் பெரியதெருவில் நேற்று இரவு 10 மணிமுதல் 11 மணிவரை போக்குவரத்து தடைபட்டது.
நன்றி;mypno
No comments:
Post a Comment