click me

Wednesday, August 29, 2012

A சான்றிதழ் பெற்ற படங்கள் டிவியில் ஒளிபரப்ப தடை

இந்திய திரைப்பட தொழிற்துறையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஏ சான்றிதழ் பெறும் சினிமாக்களை, எந்த தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பக் கூடாது என்று புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.
சில படங்கள் மறுபடியும் தணிக்கைக்கு உட்படுத்தி யு சான்றிதழ் பெற்று அதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் முறைக்கும் சினிமா தணிக்கை வாரியம் நோ சொல்லியுள்ளது.
இந்த புதிய விதிமுறை, சினிமா தயாரிப்பாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திரைப்படத்தை எடுக்கும் தயாரிப்பாளருக்கு,சாட்டிலைட் உரிமம் மூலமாக மிகப் பெரிய தொகை கிடைக்கும். ஆனால் இந்த புதிய விதியால் அதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment