சிதம்பரத்தில் பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
சிதம்பரம், ஆக., 30 : சிதம்பரம் சிவசக்தி நகர், முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் (35). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் இல்ல திருமணத்துக்காக கடலூர் சென்றிருந்தார் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து சுமார் 9 பவுன் நகை, மற்றும் 42 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிதம்பரம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்களும், போலிஸாரும் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment