click me

Sunday, August 26, 2012

கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி;ஓணம் பண்டிகையில் கால் தடுக்கி தவறி விழுந்தார்

கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி ஓணாம் விழாவின் போது தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது  .
கேரளா, எர்ணாகுளத்தை அடுத்த காக்கநாடு பகுதியில் நேற்று ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை தொடங்கி வைக்க முதல்வர் உம்மன்சாண்டி சென்றார்.
அந்நேரம் மழை பெய்து கொண்டிருந்ததால் மேடையில் ஏற முயன்ற உம்மன்சாண்டி எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி தவறி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிஸார் அவரை தூக்கி விட்டனர்.
இதன் பின்னர் உம்மன்சாண்டி மேடையில் ஏறி ஓணம் விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

No comments:

Post a Comment