அதிமுக செயற்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்
சென்னை, ஆக., 27 : தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்,
ஆட்சியில் இருக்கும் போது பாராமுகமாகவும், ஆட்சியில் இல்லாத போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுகவுக்கு கண்டனம்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மண்ணெண்னை சரியாக விநியோகிக்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம். கூடங்குளம் அணு உலையில் இருந்து கிடைக்கும் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும்.
மாநில அரசின் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்.
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை என ஐந்து அரசியல் தீர்மானங்கள் மற்றும் தமிழக அரசின் சாதனைகளைப் பாராட்டியும், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தும் 11 தீர்மானங்களாக மொத்தம் 16 தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment