click me

Sunday, August 26, 2012

சிதம்பரத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தீயில் கருகி சாவு


சிதம்பரத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தீயில் கருகி சாவுசிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி (வயது 18). இவர் சீர்காழியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று மகேஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஸ்வரியின் சுடிதார் துப்பட்டாவில் தீபிடித்து கொண்டது.
 
இதில் உடல் முழுவதும் தீபரவியதால் அலறி துடித்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.   அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மகேஸ்வரி இறந்து போனார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment