சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் உள்நாட்டிலும், ஆஸ்திரேலியாவிலும் அடுத்தடுத்த வெற்றிகளை அவர் தலைமையிலான அணி பெற்றது.
ஆனாலும் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து இந்த மாதத்தில் அந்த இடத்தை இழந்தது.
மேலும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸுக்கும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போனது. இவைகளை அடுத்தே அவர் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவு வந்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து அணியின் தலைவராக ஆலிஸ்டர் குக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தான் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவது என்று எடுத்த முடிவு, தனக்கும் அணிக்கும் நல்லது என்று ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment