ஏற்கனவே அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் துபாயில் 20 மீற்றர் உயரமும், 5 மீற்றர் அகலமும் கொண்டதாக மிகப்பெரிய காற்று சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கண்ணாடியால் ஆன இந்த சுரங்கத்திற்கு இன்பிளைட் துபாய்(InFlight Dubai) என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரங்க மைய பயிற்சியாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறுகையில், இந்த காற்று சுரங்கம் 4 மாடிகள் கொண்டதாக இருக்கும், 4 மிகப்பெரிய மின்விசிறிகள் எப்போதும் சுற்றிக் கொண்டு இருக்கும்.
மின்விசிறிகள் மூலம் உருவாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொருளையும் அந்தரத்தில் பறக்க வைக்கும்.
இந்த மையத்துக்குள் செல்லும் பார்வையாளர்கள் கண்ணாடி கோபுரத்தின் உள்ளே பறந்து மகிழலாம்.
சுமார் 3,650 மீற்றர் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்தால் காற்று விசை எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு காற்று சக்தியை உணர முடியும்.
பறக்கும்போது வெளியிடங்களை பார்க்க முடியாது. ஆனால் வானத்திலிருந்து விழும் உணர்வை பெற முடியும்.
தரையில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.





No comments:
Post a Comment