click me

Friday, August 16, 2013

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது

மும்பை, ஆக. 16-

முன் எப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62 ஆக சரிந்தது. இது இந்திய பங்குச்சந்தைகளில் கடும்  தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

ரூபாயின் மதிப்பு சரிந்ததால் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன.

மும்பை பங்குச்சந்தையில் காலை முதலே சரிவில் இருந்த சென்செக்ஸ், மதிய நிலவரப்படி 701 புள்ளிகள் சரிந்து 18665 என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 215 புள்ளிகள் சரிந்து, 5524 புள்ளிகளாக இருந்தது.

இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Friday, June 21, 2013

இலங்கை இந்தியா போட்டி மைதானத்துக்குள் LTTE கொடியுடன் புகுந்த தமிழர் (படங்கள் இணைப்பு)

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கெதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.

Tuesday, June 18, 2013

உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது.(படங்கள்)

ஏற்கனவே அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் துபாயில் 20 மீற்றர் உயரமும், 5 மீற்றர் அகலமும் கொண்டதாக மிகப்பெரிய காற்று சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கண்ணாடியால் ஆன இந்த சுரங்கத்திற்கு இன்பிளைட் துபாய்(InFlight Dubai) என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரங்க மைய பயிற்சியாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறுகையில், இந்த காற்று சுரங்கம் 4 மாடிகள் கொண்டதாக இருக்கும், 4 மிகப்பெரிய மின்விசிறிகள் எப்போதும் சுற்றிக் கொண்டு இருக்கும்.
மின்விசிறிகள் மூலம் உருவாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொருளையும் அந்தரத்தில் பறக்க வைக்கும்.

Saturday, March 30, 2013

ரெயிலில் அனுப்பிய எஸ்.எஸ்.எல்.சி. விடைதாள்கள் சேதம்: மறு தேர்வு நடத்தப்படுமா?


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய இந்த பரீட்சையின் 545 விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு தாள்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் அந்த பண்டலை இறக்கிய போது அதில் 3 கட்டுகள் குறைந்திருந்தன. அவைகளை தேடியபோது விருத்தாசலம் ரெயில் தண்ட வாளத்தில் சிதறி சேதமடைந்து கிடந்தன. இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

சவுதி அரேபியா லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்


undefinedசவுதி அரேபியா சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் மத்திய புள்ளியியல் மற்றும் தகவல் துறை திரட்டிய விவரத்தில், கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தயாரித்துள்ளது.

சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.

சரத்குமார் அவரது மனைவி ராதிகா தயாரித்து, அவர் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.
சரத்குமார், ராதிகா, சேரன், பிரசன்னா, மல்லிகா என பலரும் நடித்துள்ள படம் சென்னையில் ஒரு நாள். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் படம் இது. நிஜத்தில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இப்படத்திற்கு வரி விலக்கு கோரியிருந்தனர். அழகான படத் தலைப்பு, அருமையான கதை என சகலமும் சிறப்பாக இருந்தபோதும் கூட வரி விலக்கு இல்லை என்று கூறி விட்டார்களாம்.
இத்தனைக்கும் ஆட்சி அதிமுகதான், முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்தான் சரத்குமார், அதிமுகவின் இரட்டை இலையில் நின்றுதான் அவர் எம்.எல்.ஏவே ஆனார். ஆனாலும் படத்துக்கு வரிவிலக்கு இல்லை என்று கூறியிருப்பதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் இந்த மறுப்புக்குக் காரணம் சன் டிவிதான். அதாவது சன் டிவியின் நல்லாசியுடன் என்று இப்படத்திற்கு விளம்பரம் செய்து வருவதுதான் மேலிடக் கண்களை உறுத்தி, வரி விலக்கு வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம்,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைபொதுச் செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம். 17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அப்பா அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும்.

காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கொள்கை இல்லாத கட்சிகள் ஆனால்  பா.ம.க. கொள்கை உள்ள கட்சி என அவர் கூறினார்.

மாநில தலைவர் ஜி.கே.மணி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.