Tuesday, January 15, 2013
பாக். பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்ஐ கைதுசெய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமரையும் அவருடன் சேர்த்து இன்னும் 15 பேரையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.2010-ம் ஆண்டில் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தபோது, அரச செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை பர்வேஸ் அஷ்ரஃப் மறுக்கின்றார்.
இதேவேளை, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிரதமரின் உடனடி பதவி விலக்கலுக்கு வழியமைக்காது என்றே அவதானிகள் பெரும்பாலும் கருதுகின்றனர்.
அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதகுருவான தாஹிருல் காத்ரி ஆயிரக்கணக்கான மக்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.
மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார்
அஹ்மதாபாத்:கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்ட வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார். கோத்ரா ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உள்ள வீட்டில் அவரது மரணம் நிகழ்ந்தது. நீரழிவு நோயால் அவதிப்பட்ட உமர்ஜியின் கால் செயலிழந்தது.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக துயர்துடைப்பு முகாம்களை திறந்து பணியாற்றுவதில் முன்னணியில் இருந்த உமர்ஜியை 2003-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் தீவைப்பு வழக்கில் மோடி அரசு அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் முக்கிய சூத்திரதாரி என குற்றம் சாட்டி எட்டு ஆண்டுகளாக உமர்ஜி அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.
ஆன்ம தைரியத்தின் சின்னம் உமர்ஜி என்று பிரபல சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.
Sunday, January 13, 2013
ஹிஜாப் தனித்தன்மை

உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை.
மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.
Sunday, January 6, 2013
சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம்

சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது.
ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி

சில நாட்களுக்கு முன்புகூட ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தான் செய்துவரும் சமுதாயப் பணியினைத் தனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார், அதற்கு எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் கோரியிருந்தார்.தனது வாரிசு ஸ்டாலின்தான் என மீண்டும் கருணாநிதி குறிப்பிடுகிறார் என்று ஊடகங்கள் அப்போது செய்திவெளியிட்டன.
கருணாநிதியின் மூத்தமகன் அழகிரியோ, தனது தந்தை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி "திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசுகள் நியமிக்கப்பட" எனக் கூறினார்.
Thursday, January 3, 2013
அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.(வீடியோ இணைப்பு )
போர்க் கப்பல்களை தாக்கும் அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் கப்பற்படை பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. இதில் பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் கடைசி நாளில் 200 கிலோமீற்றர் இலக்கை தாக்கும் கேதர் என்ற அதிநவீன ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றியில் முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் தன்னுடைய இராணுவ வலிமையை காட்டுவதற்காகவே பரிசோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, January 2, 2013
சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி
சென்னை, ஜன. 1-
சென்னையில் இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடும் மாஞ்சா காற்றாடி, அடிக்கடி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த அடுத்தடுத்த அசம்பாவித சம்பவங்களையடுத்து நகரம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மாஞ்சா காற்றாடி விடுபவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காற்றாடி பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே மாஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது என்பதற்கு இன்று நடந்த பலியே சாட்சியாக அமைந்துள்ளது.
சென்னையில் இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடும் மாஞ்சா காற்றாடி, அடிக்கடி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த அடுத்தடுத்த அசம்பாவித சம்பவங்களையடுத்து நகரம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மாஞ்சா காற்றாடி விடுபவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காற்றாடி பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே மாஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது என்பதற்கு இன்று நடந்த பலியே சாட்சியாக அமைந்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மைதானத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்

சென்னையில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள்(3ம் திகதி) நடக்கிறது. போட்டிக்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றுள்ளனர்.
கொல்கத்தா மைதானம் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இதுவரை அமைந்திருக்கிறது. இந்தியாவுடன் நடந்த அனைத்து போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவும்- பாகிஸ்தானும் இந்த மைதானத்தில் மோதுகின்றன.
ஐவரி கோஸ்ட் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 60 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட்.
இந்நாட்டின் பிரதான நகரமான அபித்ஜானில் உள்ள பெலிக்ஸ் ஹூப்பட் போய்னி மைதானத்தில் நேற்றிரவு புத்தாண்டு விழா நடைபெற்றது. வண்ண வண்ண வாணவேடிக்கையைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
Subscribe to:
Posts (Atom)