தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய இந்த பரீட்சையின் 545 விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டது.பின்னர் இந்த தேர்வு தாள்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் அந்த பண்டலை இறக்கிய போது அதில் 3 கட்டுகள் குறைந்திருந்தன. அவைகளை தேடியபோது விருத்தாசலம் ரெயில் தண்ட வாளத்தில் சிதறி சேதமடைந்து கிடந்தன. இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.









