click me

Wednesday, October 17, 2012

பரங்கிப்பேட்டையில் இன்று மின்வெட்டை கண்டித்து போராட்டம்


பரங்கிப்பேட்டை,  அக் 16: பரங்கிப்பேட்டையில் இன்று  வரலாறு காணாத (16 மணி நேர) மின்வெட்டை கண்டித்து பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் சஞ்சிவிராயர் பகுதியில் பொதுமக்கள் திரண்டு தெருவில் பாய் போட்டு, கையில் மெழுகுர்வத்தி மற்றும் தீப்பந்தம் ஏந்தி தங்கள் எதிர்ப்பை காட்டினார். 

இந்த போராட்டத்தில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் செய்தியை சேகரிக்க சன் டிவி மற்றும் தமிழன் டிவி போன்ற பிரபலமான டிவிகளிலிருந்தும் வந்து செய்தி சேகரித்தனர்.

இந்த போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் மின்வெட்டால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.








 

நன்றி:tntjpno

Tuesday, October 16, 2012

கூடங்குளம் :"ஏவுகணை தாக்கினாலும் அணு உலைக்கு பாதிப்பு வராது"


சர்ச்சையில் சிக்கியுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களையும் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு, அந்த அணு உலை நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம்அணு உலைக்கு எதிரான வழக்கு விசாரணையில், கடந்த வாரம் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
அதேநேரத்தில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
செவ்வாயன்று, மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் வஹன்வதி வாதிட்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக, ஜெனரேஷன் 3 ப்ளல் என்ற நவீன தொழில்நுட்பம் கூடங்குளம் அணு உலையில்தான் பயன்படுத்தப்படடிருப்பதாக அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி சேது சமுத்திரத் திட்டம் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதிஇந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் காணப்படும் ராமர் பாலம் என்று சொல்லப்படுகின்ற மணற்திட்டுகளை தேசியச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.அத்திட்டுக்களுக்குச் சேதம் வராமல் தனுஷ்கோடி வழியாக சேதுசமுத்திரம் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காகவென நியமிக்கப்பட்ட ஆ.கே.பச்சோரி தலைமையிலான நிபுணர் குழு மாற்றுப்பாதையின் விளைவாய் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கூறியிருக்கும் நிலையில், சேது சமுத்திரத்திட்டம் கைவிடப்பட்டு அப்பகுதி தேசியச் சின்னமாக அறிவிக்கப்படவேண்டுமென உச்சநீதிமன்றத்திடம் தமிழக அரசு சார்பாகக் கூறப்பட்டிருக்கிறது.
சேதுக்கால்வாய் படம்
அது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி தி.மு. க உள்ளிட்ட கட்சிகள் வாதாடிப் பெற்ற திட்டம் நிறைவேற்றப்பட்டால் அக்கட்சிகளுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்பதாலேயே முதல்வர் முட்டுக்கட்டை போடுவதாகக் குறைகூறியிருக்கிறார்.சேது சமுத்திரத்திட்டத்தின் விளைவாய் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நிலையிலே உள்ள தென்மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வு வளம்பெறுமென்பதால்தான் அத்திட்டம் உருவாக்கப்ப்ட்டது என்கிறார் கருணாநிதி.

ஜப்பானில் பரபரப்பு:-சர்ச்சைக்குரிய தீவுகளை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் சீன போர்க்கப்பல்கள்

சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள் முன்னேறி வருவதையடுத்து, ஜப்பானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் தங்களுக்கே சொந்தம் என சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், சென்காகு தீவுகளை விலைக்கு வாங்கி விட்டதாக ஜப்பான் திடீரென அறிவித்தது. ஜப்பானின் இந்த அறிவிப்புக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு போர்க்கப்பல்களும் சென்காகு தீவுகள் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவின் 7 போர்க்கப்பல்கள் சென்காகு தீவுகளை நோக்கி முன்னேறி வருவதால் ஜப்பானில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் அனைத்தும் பசிபிக் கடலில் போர்ப்பயிற்சியை முடித்துக்கொண்டு சீனா திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.
எனினும் தற்போதைய சூழ்நிலையில், இந்த கப்பல்கள் ஜப்பானை கவலை கொள்ளச் செய்துள்ளது. இதையடுத்து சென்காகு தீவு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒகினவா மாகாணத்திலிருந்து 49 கி.மீ தொலைவில் தற்போது இந்த கப்பல்கள் உள்ளன. போர்க்கப்பல்கள், ஏவுகணை அழிக்கும் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை மீட்கும் கப்பல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
தற்போது சீன கப்பல்கள் சென்று கொண்டிருக்கும் பாதை பசிபிக் கடலில் இருந்து சீனாவுக்கு செல்லும் வழக்கமான பாதை என்ற போதிலும் தற்போதைய சூழலில் ஒருவித பதட்டத்தையே சீன கப்பல்கள் ஏற்படுத்தியுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உயிரிழந்ததாக வதந்தி

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னிகர், உயிரிழந்ததாக வதந்தி தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வதந்தி பரவியுள்ளது.
சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி அர்னால்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், நடிகர் அர்னால்டு மரணமடைந்ததாக செய்திகள் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அர்னால்டு பிரபல நடிகர் மட்டுமல்லாது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் கவர்னராகவும் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2011 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, October 13, 2012

பரங்கிப்பேட்டையில் விரைவில் நூதன போராட்டம்! மின்வெட்டை கண்டித்து

பரங்கிப்பேட்டை, அக் 13: தமிழகமெங்கும் ஏற்படும் மின் வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பல இடங்களில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 

தற்போது பரங்கிபேட்டையில் எப்போதாவது கரண்ட் வருகின்றது (16  நேரம் பவர் கட் ) இதை கண்டிக்கும் வகையில் தி. மு.க நிர்வாகியான யூனுஸ் நானா தலைமையில் இரண்டொரு நாளில் பரங்கிபேட்டையில் உள்ள ஒரு பொது இடத்தில் அணைத்து சமுதாய மக்களும் பாய், தலைகாணி போட்டு படுத்து நூதன போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு  வந்தனர்.

 நன்றி :tntjpno

Thursday, October 11, 2012

துருக்கி :சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது

சிரியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை இடைமறித்து, அதிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்களை துருக்கி பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரியா இராணுவம் கடந்த 3ஆம் திகதி எல்லையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 5 பேர் உயரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக துருக்கி பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என துருக்கி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுத தளவாடங்களும் செல்ல விடக்கூடாது என அரசு முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியா தலைநகர் டமாஸ்கள் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது.
180 பேர் பயணிக்கக் கூடிய சிரியாவிற்கு சொந்தமான இந்த விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின.
இந்த விமானத்திலிருந்த இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது.