click me

Saturday, September 1, 2012

மும்பையின் பூர்வகுடி அல்ல.. ராஜ்தாக்கரே பீகாரிலிருந்து குடியேறியவர்தான்...


டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வன்முறையைத் தூண்டும் மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
மும்பையில் அண்மையில் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதற்கு பீகார் தலைமைச் செயலர் எதிர்ப்புத் தெரிவித்து மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த ராஜ்தாக்கரே, பீகாரிகளை ஊடுருவல்காரர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறியிருந்தார்.
ராஜ்தாக்கரேயின் இக்கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் ராஜ்தாக்கரே என்று ஒரேயடியாகப் போட்டுத்தாக்கினார். அப்படியானால் ராஜ்தாக்கரேயும் ஒரு ஊடுருவல்காரர்தானா? என்றும் கேள்வி எழுப்பியதுடன் மும்பையில் குடியேறும் முன்பு அவர் பீகாரிலிருந்து மத்திய பிரதேசத்தில் செட்டிலாகி இருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் மும்பை நகரமானது உண்மையில் மீனவர்களின் குடியிருப்புப் பகுதி என்றும் மற்ற அனைவருமே வந்தேறிகள்தான் என்றும் அதிரடி காட்டியிருக்கிறார்.
இதுக்குப் பெயர்தான் பூமாராங்கிப் போன கதையோ!

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர ரூ.1,000 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு

சென்னை, செப்.,1: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினை போக்கும் விதத்தில் 1,00,000 கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  2011ம் ஆண்டு இறுதியில், ‘தானே புயல்’ தமிழகத்தை தாக்கியதன் விளைவாக, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கட்டமைப்புகளையும், பயிர்களையும், வீடுகளையும், படகுகளையும் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கி, அப்பகுதி மக்களின் உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் சூறையாடிவிட்டுச் சென்ற நிலையில், போர்க்கால அடிப்படையில், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நடிகர் கவுண்டமணியின் தாயார் மரணம்

உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87), நேற்று காலமானார்.
இவர், தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். குறிப்பாக அவருடைய காலில் காயம் ஏற்பட்டது.
அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார்.
அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.

பேஸ்புக்கில் லைக்ஸ் முறைகேடு : நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

செப்., 01 : பேஸ்புக் இணைய பக்கத்தில் சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்துக்காக போலியாக அதிகமான லைக்ஸ் கொடுத்து வருவதாக எழுந்த புகாரினை அடுத்து, அதுபோன்று போலியாக லைக்ஸ் கொடுப்பதை தடுக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக்குக்கான அதிகாரப்பூர்வமான இணையப் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ள பேஸ்புக், ஒரே நபர் ஏராளமான லைக்ஸ் கொடுப்பது இனி முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்துக்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம்: என்.எல்.சி. தலைவர் தகவல்

அடுத்த ஆண்டு முதல் தமிழகத்துக்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம்: என்.எல்.சி. தலைவர் தகவல்
என்.எல்.சி. தலைவர் சுரேந்தர்மோகன் நெய்வேலியில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நெய்வேலியில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2-வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுற்று மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் பாரத மிகுமின் நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

எனவே அக்டோபர் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என பாரத மிகுமின் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதேபோல் 2-வது யூனிட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மற்றொரு 250 மெகாவாட் மின்ன உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் என்.எல்.சி. மின் உற்பத்தி 3240 மெகா வாட்டாக உயரும். 

தற்போது என்.எல்.சி.யிலிருந்து 1100 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த மின்சாரத்தின் அளவு 2013 மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் 1100 மெகா வாட்டிலிருந்து 1400 மெகா வாட்டாக உயர்த்தி தமிழகத்துக்கு வழங்கப்படும். 

பரங்கிப்பேட்டை அருகே காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்த வாலிபர் சாவு

பரங்கிப்பேட்டை அருகே காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்த வாலிபர் சாவுபரங்கிப்பேட்டையை அடுத்த கே.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 25). இவருக்கும், பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 
 
காதல் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்தனர். அதையடுத்து கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி பரங்கிப்பேட்டை அருகே உள்ள சுடுகாட்டில் 2 பேரும் விஷம் குடித்தனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த காதல் ஜோடியை அந்த பகுதியினர் மீட்டனர். பிறகு 2 பேரும் சிகிச்சைக்காக தனித்தனியே வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

மர்ஹூம் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம.......)

IQBAL NANA.JPG
பரங்கிபேட்டை யாதவள் தெரு மர்ஹூம் அஸ்ரப் அலி (பழைய கிரசென்ட் ஐஸ் பாக்டரி ) அவர்களின் மருமகனும்,ஜனாப் சலீம்
மற்றும் ஜனாப் சுஹைல் இவர்களின் மச்சானுமாகிய அத்திக்கடை சேர்ந்த இக்பால் முஹம்மத் அவர்கள் 
(31/08/2012) மர்ஹூம் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று நல்லடக்கம் செய்யப்படும்..
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார்களின் பிரிவால் வாடும் உறவினர்கள் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்து அருள்வானாக (ஆமீன்)..