click me

Wednesday, October 17, 2012

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்


நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனத்தின் சந்திப்பு அடங்கிய அந்த அபூர்வ காணொளி இதோ உங்கள் பார்வைக்கு :
(வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது.
நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார்.
- அப்துல் கையூம்

கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்:பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்கடலூர், அக். 17-

கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து பூஜ்ஜியக்கழிவு மேலாண்மை கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பண்ருட்டி நகரில் நடைபெற்றது. 

விஞ்ஞானிகள் எச்சரிக்கை காருக்குள் புகைபிடித்தல்

பின்னாலிருக்குந்து சுவாசிப்பவர்களுக்கு அனாவசியமாக பாதிப்பு ஏற்படுகிறது
காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்துவைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் ஏசியை ஓடவிட்டுக்கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருக்கிறது என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.காரின் முன்னிருக்கையில் அமர்ந்து ஒருவர் புகைக்கும்போது பின்னால் அமர்ந்திருக்குக்கக்கூடியவர்களை இந்த நச்சுப் பொருட்கள்பாதிக்கும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புகைக்கும்போது காருக்குள் காற்றில் நச்சுப்பொருட்களை அளவை 85 கார்ப் பயணங்களில் கணக்கிட்டு ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக டொபாக்கோ கண்ட்ரோல் ஜர்னல் என்ற புகைப்பழக்க ஒழிப்பு விழிப்புணர்வு சஞ்சிகை கூறுகிறது.
காருக்குள் அமர்ந்து புகைபிடிப்பதற்கு தடையைக் கொண்டுவர வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கழகம் விரும்புகிறது.

நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம்

நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.
பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.
இதுவரை வானியலாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் வானியலாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
நெப்டியூனைவிட இந்த புதிய கிரகம் கொஞ்சம் பெரிய அளவில் இருப்பதாகவும் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

1 மணி நேர மின்வெட்டு நாளை முதல் சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு: மின்சார வாரியம் அறிவிப்பு

நாளை முதல் சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு: மின்சார வாரியம் அறிவிப்புதமிழகத்திற்கு மின்சாரத் தேவை மொத்தம் 12,000 மெகாவாட். ஆனால், 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. சென்னையில் மட்டும் 1 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு அதிகமாக உள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டை போக்குவது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு தமிழகத்தில் மின்சார நிலை குறித்து வாரந்தோறும் முதலமைச்சருக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் 1 மணி நேர மின்வெட்டு, நாளை முதல் 2 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில்ஆசியாவின் 11 பெரிய ஐ.டி. கம்பெனிகளில் இந்தியாவின் 3 நிறுவனங்கள்


ஆசியாவின் 11 பெரிய ஐ.டி. கம்பெனிகளில் இந்தியாவின் 3 நிறுவனங்கள்தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவில்தான் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், ஆசிய நாடுகளும் இதற்கு சளைத்ததல்ல என்பது இப்போது தெரியவந்துள்ளது.
 
போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய சமீபத்திய ஆய்வு இதனை நிரூபித்துள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நிறுவனங்களை போர்ப்ஸ் நிறுவனம் கணக்கெடுத்து டாப்-50 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.

சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? தகவல் அளித்தால் ரூ.10 கோடி பரிசு

பாகிஸ்தானில் சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு, ரூ.10 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பள்ளி குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களை எதிர்த்தும் போராடிய மலாலா மீது, கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மலாலா நேற்று முன்தினம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.