click me

Tuesday, September 11, 2012

கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம்

கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம் அமைப்பதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: மு.க.அழகிரி தகவல்தமிழ்நாட்டில் கடலூரில் பிசிபிஐஆர் (ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் தொழில் முதலீட்டு மண்டலங்கள்) உருவாக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெறும். 2013-ல் பணி தொடங்கும். இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு மத்திய மந்திரி மு.க. அழகிரி கூறினார்.

Sunday, September 9, 2012

ப்ரீ-பெய்டு செல்போன்களுக்கு ஐ.எஸ்.டி. வசதி ரத்து: ஓரிரு நாள்களில் அறிவிப்பு


சென்னை, செப். 9: ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஐ.எஸ்.டி. வசதி ரத்து செய்யப்படும் என்று தொலைதொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ப்ரீ-பெய்டு செல்போன் இணைப்புகள் பெறும் போது, ஐ.எஸ்.டி. எனப்படும் சர்வதேச அழைப்பு வசதியும் சேர்த்தே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் போஸ்டு-பெய்டு இணைப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்படுவதில்லை. இந்த வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் கூடுதல் முன்வைப்புத் தொகை செலுத்தியே இந்த வசதியை பெறமுடியும்.
 இப்போது ப்ரீ-பெய்டு செல்போன் இணைப்புகளுக்கும் ஐ.எஸ்.டி. வசதியை விண்ணப்பித்து பெற வேண்டும் என்ற புதிய விதியை செயல்படுத்த தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) முடிவு செய்துள்ளது என்று தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியது: "ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால், பல மடங்கு பணம் கிடைக்கும் என்று சில மோசடி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை குழப்புகின்றன. இதனை நம்பி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் இது போன்ற மோசடி எஸ்.எம்.எஸ்.-களுக்கு பதிலளித்தாலோ, அந்த எண்ணுக்கு போன் செய்தாலோ அதிகப்படியான தொகை போன் பேலன்ஸில் இருந்து எடுக்கப்பட்டு விடுகிறது.

கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலைஅடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கடலூர், செப்.9: கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது தாலிசரடு மற்றும் மோதிரம் திருடுபோனது.
கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). விவசாயியான இவரது மனைவி மாலா (28). இவர்களுக்கு பிரசாத் (9), சுவேதா (8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுரேஷ் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். பிரசாத் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். சுவேதா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாலா ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது அருகில் ரத்தம் தோய்ந்த இரும்பு ராடு கிடந்துள்ளது. மாலா மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் ஈராக்கில்: 52 பேர் பலி


பாக்தாத், செப்.9 -
 
ஈராக்கில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்: 52 பேர் பலிஈராக்கில் உள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் மார்கெட்டுகளை குறி வைத்து பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 52 பேர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
 
தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மசூதி அருகே நடந்த மிக மோசமாக இரு கார் குண்டுவெடிப்பில் மட்டும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேசன் பகுதியில் நடந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இறந்துள்ளனர்.
 
ஆயில் கம்பெனி ஒன்றின் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் அங்கு வேலையில் சேருவதற்காக நின்றிருந்த பலர் உயிரிழந்தனர். இந்த மாதம் இதுவரை நடந்த தாக்குதலில் மட்டும் மொத்தம் 82 பேர் பலியாகியுள்ளனர்.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜ்: பால் தாக்ரே கருத்துக்கு மணிஷ் திவாரி பதில்


பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜ்: பால் தாக்ரே கருத்துக்கு மணிஷ் திவாரி பதில்சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதம மந்திரி வேட்பாளராக நிற்க சுஷ்மா சுவராஜ் ஒருவரே தகுதியும் திறமையும் உடையவர் என்று கூறியிருந்தார்.
 
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி இதுகுறித்து கூறியதாவது:-
 
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மக்களின் முடிவை தெரிந்து கொள்வதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியில் பிரதம மந்திரி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்னும் வியாதியால் வருந்தி கொண்டிருக்கிறது.

ஒரே மாதத்தில் 13 விழுக்காடு வாடிக்கையாளர்களை இழந்த ரிலையன்ஸ்


டெல்லி: இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.20 விழுக்காடு சரிவை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணம் ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதுதானாம்
ஜூன் மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.06 கோடியாக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் இது 91.35 கோடியாக குறைந்து போனது. இவ்வளவு இணைப்புகள் கொடுக்கப்பட்டாலும் தொடர் பயன்பாட்டில் இருப்பது என்னவோ 76 விழுக்காடு மட்டும்தான்!
இந்தியாதான் செல்போன் பயன்பாட்டு சந்தையில் 2-வது இடம். இதில் 95 விழுக்காட்டினர் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள்தான்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பார்தி ஏர்டெல் நிறுவனம்தான் வாடிக்கையாளர் மற்றும் வருவாய் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது ஜூலை மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் 15 லட்சம் பேர். மொத்தம் 18.8 கோடி இணைப்புகளை ஏர்டெல் வழங்கியிருக்கிறது.

கண்டிக்கத்தக்க பேச்சு:--முஸ்லீம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறவர்கள்-அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சைப் பேச்சு


அஸ்ஸாமில் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக அவர்களின் படிப்பறிவின்மைதான் காரணம் என்று கோகாய் கூறியுள்ளார்.
 Muslims Illiterate Bear More Child கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வைஸ் என்ற டிவி ஷோவின்போது பேசுகையில்தான் கோகாய் இவ்வாறு தெரிவித்தார்.
அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
தாப்பர்: அஸ்ஸாமில் சில மாவட்டங்களில் இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிகஅளவில் பெருகியுள்ளனர். குறிப்பாக கோக்ரஜாரில் 19 சதவீத அளவுக்கு முஸ்லீம்கள் அதிகரித்துள்ளனர். டுப்ரியில் 29 சதவீத அளவிலும், போங்கய்கானில் 31 சதவீத அளவிலும் முஸ்லீம்கள் அதிகரித்துள்ளனர். இது இயற்கையான அதிகரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்ததன் விளைவாகவே இது இருக்க முடியும். உங்களது கருத்து.