click me

Saturday, December 1, 2012

கும்மத்பள்ளி புதிதாய் கட்ட அடிக்கல்


பரங்கிப்பேட்டை: நேற்று (30-11-2012) காலை எட்டு மணியளவில் கும்மத்பள்ளியில் புதுபள்ளியின் புதிய  கட்டுமானப்பணிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கபட்டது, இந்நிகழ்சியில் H. அப்துஸ் சமது ராஷதி, மற்றும் புதுபள்ளி இமாம் M.S. காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி முன்னிலை வகிக்க, முத்தவல்லி H.J. பஷீர் அஹ்மத் தலமை தாங்கினார்.

OECD நிறுவனம் எச்சரிக்கை:கனடாவின் பொருளாதாரம் திடீரென சரிவடையலாம்

கனடாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ள போதிலும், சில பின்னடைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக OECD என்ற சர்வதேச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

மக்களின் மனதை கொள்ளை கொண்ட நகரம் பாரிஸ்

உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமாக பாரிஸ் திகழ்வது தற்போது தெரியவந்துள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பெருவாரியான மக்கள் பாரிஸ் நகரத்தை Like செய்துள்ளனர்.
அதாவது 2,035,433 பேர் தங்களுக்கு பிடித்த நகர் பாரிஸ் என தெரிவித்துள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த பாரிஸ் நகர வர்த்தகர்கள் பேஸ்புக் மூலமாகவே தங்கள் பொருட்களை விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்தாண்டு மட்டும் பாரிசுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 29 மில்லியன் ஆகும்.

தென்சீன கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்தது சீனா

தென்சீன கடல் பகுதியில் தனது பாதுகாப்பு கெடுபிடிகளை சீனா அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தனது எல்லை போலிஸ் அதிகாரிகளை சமீபத்தில் இடம்மாற்றியுள்ள சீனா, மேலும் இவ்வதிகாரிகள் இக்கடற்பகுதியில் செல்லும் கப்பல்களை கைப்பற்றி பரிசோதனைகள் செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து சீன வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் கூறுகையில், தென் சீனக்கடலின் முக்கியத்துவம் கருதியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது ஒருபோதும் சர்வதேச கப்பல்கள் சுதந்திரமாக இக்கடற்பகுதியில் பயணிப்பதை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் துருவப்பனிகள் உருகி கொண்டிருப்பதால் கடல்மட்டம் உயர்கிறது

கனடாவில் துருவப்பனிகள் உருகி கொண்டிருப்பதால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரை பகுதிகள் ஆபத்தை சந்திக்கின்றன என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைகழகத்தின் புவி ஆராய்ச்சி துறையின் பேராசிரியர் ஆண்டுரூ ஷெப்பர்ட் கூறுகையில், கீரின்லாந்து மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் உறைபனிகள் மிக வேகத்துடன் உருகி கொண்டிருக்கின்றன. இது குறித்து புதிய ஆராய்ச்சி ஒன்று நடந்து வருகின்றது.
இக்குழுவில் 26 ஆய்வு நிலையங்களை சேர்ந்த 47 தட்பவெப்ப அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கு எதிராக 3000 வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்

ஐ.நா சபையில் பாலஸ்தீனத்திற்கு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
ஐ.நா சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு 193 நாடுகள் ஆதரவு அளித்தும், 9 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார்.
அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் உடல் தகனம்


 Inder Kumar Gujral Cremated With Full State Honours டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக் குறைவால் குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஜ்ரால் நேற்று மாலை உயிரிழந்தார். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது உடல் யமுனை நதிக் கரைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குஜ்ராலின் மகனும் அகாலி தள எம்.பியுமான நரேஷ் குஜ்ரா உட்பட இரு மகன்களும் பேரனும் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
குஜ்ரால் உடல் தகனம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.