click me

Tuesday, August 28, 2012

afghanisthan; பொதுமக்கள் 17 பேர் கோரப் படுகொலை

பொதுமக்கள் படுகொலை சம்பவ இடம் வரைபடத்தில்...

ஹெல்மண்ட் பிராந்தியத்தின் மூஸா கலா மாவட்டத்தில் சாலையோரத்திலிருந்து 2 பெண்களும் 15 ஆண்களுமாக 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.


இச்சடலங்கள் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்டோ அல்லது குரல்வளை அறுக்கப்பட்டோ கிடந்தன. சில சடலங்களில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும், துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களும் இருந்தன.
இப்பகுதி தாலிபான்களின் பிடியில் உள்ள இடம் என்பதால் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் மந்தமாகத்தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன.அப்பகுதி பெண்கள் இருவர் யாருக்கு சொந்தம் என்று இரண்டு தாலிபான் தளபதிகள் இடையில் ஏற்பட்ட தகராறு இந்தக் கொடூரமான வன்முறையில் முடிந்தது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஈரான் நாட்டுக்கு பயணம்

புது தில்லி, ஆக.28: பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஈரான் நாட்டுக்கு 4 நாள் பயணமாகப் புறப்பட்டுச் செல்கிறார். ஈரானில் நடைபெறவுள்ள அணிநேரா நாடுகளின் 16வது மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர். இந்த மாநாட்டில், வங்கதேசம், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர்களும் கலந்துகொள்வதால், அவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தலாம் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள

பஸ்கள் மோதல்: 5 பேர் பலி

பெரம்பலூர், ஆக.28: பெரம்பலூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் பலியாயினர். 10 பேர் காயம் அடைந்தனர்.
பெரம்பலூர் - ஆலத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலத்தில் இருந்து செல்லும் பஸ் சாலையோரம் நின்றிருந்தது. இதன் மீது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பஸ் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் திருச்சி மாநகராட்சி 15வது வார்டு கவுன்சிலர் அமுதா மற்றும் அவர் மகன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Monday, August 27, 2012

இறப்பு செய்தி


வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகளாரும் 

S. நூருதீன் அவர்களின் மனைவியும், சுல்தான் மைதீன் உடைய மாமியாரும் ,

ஹலீல் ரஹ்மான் ,நசிருதீன் இவர்களின் பெரிய தாயாரும் 

S. சம்சுல் புகாரி ,S. இமாம் கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய  ரஹீமா பீவி அவர்கள்

மர்ஹூம் ஆகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் 

மீராப்பள்ளியில் .

தென் அமெரிக்க நாடுகளில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

வாஷிங்டன் உள்ளிட்ட தென் அமெரிக்நாடுகள் மற்றும் மெக்ஸிக்கோவில் பயங்க 
நிலநடுக்கம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் ள‌வி‌ல் 7.4 க பதிவாகியுள்ளது
 
தென் அமெரிக்காவில் எல் சால்வடோரகடற்கரையில் உள்ள 7.4 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதுஇந்நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் ஒருபகுதியிலும் நன்கு உணரப்பட்டதாக அமெரிக்புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.இதனால் மத்திய ,தென் அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிகோ நாடுகள் ஆட்டம் கண்டன.

இதுவரை பொருள் இழப்புசேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 2.37 மணி அளவில் தெற்கிலிருந்து 111 கிமீ துரத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்குபேட்டரில் வைத்திருந்த குழந்தை பலி

சென்னை, ஆக., 27 : சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாள் ஆன பெண் குழந்தை எடை குறைவு காரணமாக இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குழந்தை நேற்று மதியம் இறந்துவிட்டதாக செவிலியர்கள் கூறினர்.
குழந்தை இறந்த துக்கத்துடன் குழந்தையின் உடலைப் பெற்ற உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் முகம் ஒரு புறம் கடித்துக் குதறப்பட்டிருந்தது. அதைப் பார்த்த உறவினர்கள், குழந்தையை பெருச்சாளி கடித்ததால்தான் குழந்தை உயிரிழந்துள்ளது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்பகுதிக்கு வந்த மருத்துவ நிர்வாகிகளும், காவல்துறையினரும் உறவினர்களிடம் பேசி வருகின்றனர்.

அதிமுக செயற்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்

சென்னை, ஆக., 27 : தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்,
ஆட்சியில் இருக்கும் போது பாராமுகமாகவும், ஆட்சியில் இல்லாத போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுகவுக்கு கண்டனம்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மண்ணெண்னை சரியாக விநியோகிக்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம். கூடங்குளம் அணு உலையில் இருந்து கிடைக்கும் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும்.
மாநில அரசின் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்.
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை என ஐந்து அரசியல் தீர்மானங்கள் மற்றும் தமிழக அரசின் சாதனைகளைப் பாராட்டியும், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தும் 11 தீர்மானங்களாக மொத்தம் 16 தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.