click me

Friday, August 16, 2013

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது

மும்பை, ஆக. 16-

முன் எப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62 ஆக சரிந்தது. இது இந்திய பங்குச்சந்தைகளில் கடும்  தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

ரூபாயின் மதிப்பு சரிந்ததால் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன.

மும்பை பங்குச்சந்தையில் காலை முதலே சரிவில் இருந்த சென்செக்ஸ், மதிய நிலவரப்படி 701 புள்ளிகள் சரிந்து 18665 என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 215 புள்ளிகள் சரிந்து, 5524 புள்ளிகளாக இருந்தது.

இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Friday, June 21, 2013

இலங்கை இந்தியா போட்டி மைதானத்துக்குள் LTTE கொடியுடன் புகுந்த தமிழர் (படங்கள் இணைப்பு)

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கெதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.

Tuesday, June 18, 2013

உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது.(படங்கள்)

ஏற்கனவே அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் துபாயில் 20 மீற்றர் உயரமும், 5 மீற்றர் அகலமும் கொண்டதாக மிகப்பெரிய காற்று சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கண்ணாடியால் ஆன இந்த சுரங்கத்திற்கு இன்பிளைட் துபாய்(InFlight Dubai) என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரங்க மைய பயிற்சியாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறுகையில், இந்த காற்று சுரங்கம் 4 மாடிகள் கொண்டதாக இருக்கும், 4 மிகப்பெரிய மின்விசிறிகள் எப்போதும் சுற்றிக் கொண்டு இருக்கும்.
மின்விசிறிகள் மூலம் உருவாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொருளையும் அந்தரத்தில் பறக்க வைக்கும்.

Saturday, March 30, 2013

ரெயிலில் அனுப்பிய எஸ்.எஸ்.எல்.சி. விடைதாள்கள் சேதம்: மறு தேர்வு நடத்தப்படுமா?


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய இந்த பரீட்சையின் 545 விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு தாள்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் அந்த பண்டலை இறக்கிய போது அதில் 3 கட்டுகள் குறைந்திருந்தன. அவைகளை தேடியபோது விருத்தாசலம் ரெயில் தண்ட வாளத்தில் சிதறி சேதமடைந்து கிடந்தன. இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

சவுதி அரேபியா லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்


undefinedசவுதி அரேபியா சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் மத்திய புள்ளியியல் மற்றும் தகவல் துறை திரட்டிய விவரத்தில், கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தயாரித்துள்ளது.

சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.

சரத்குமார் அவரது மனைவி ராதிகா தயாரித்து, அவர் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.
சரத்குமார், ராதிகா, சேரன், பிரசன்னா, மல்லிகா என பலரும் நடித்துள்ள படம் சென்னையில் ஒரு நாள். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் படம் இது. நிஜத்தில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இப்படத்திற்கு வரி விலக்கு கோரியிருந்தனர். அழகான படத் தலைப்பு, அருமையான கதை என சகலமும் சிறப்பாக இருந்தபோதும் கூட வரி விலக்கு இல்லை என்று கூறி விட்டார்களாம்.
இத்தனைக்கும் ஆட்சி அதிமுகதான், முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்தான் சரத்குமார், அதிமுகவின் இரட்டை இலையில் நின்றுதான் அவர் எம்.எல்.ஏவே ஆனார். ஆனாலும் படத்துக்கு வரிவிலக்கு இல்லை என்று கூறியிருப்பதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் இந்த மறுப்புக்குக் காரணம் சன் டிவிதான். அதாவது சன் டிவியின் நல்லாசியுடன் என்று இப்படத்திற்கு விளம்பரம் செய்து வருவதுதான் மேலிடக் கண்களை உறுத்தி, வரி விலக்கு வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம்,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைபொதுச் செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம். 17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அப்பா அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும்.

காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கொள்கை இல்லாத கட்சிகள் ஆனால்  பா.ம.க. கொள்கை உள்ள கட்சி என அவர் கூறினார்.

மாநில தலைவர் ஜி.கே.மணி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது அணியைச் சேர்ந்தவர்தான் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார்.:முலாயம் சிங்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்தார்.
சமீப நாள்களாக மத்திய அரசுக்கு எதிராக முலாயம் சிங் கடுமையான கருத்துகளைக் கூறி வந்ததையடுத்து அவர் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், எனினும் மத்திய அரசு தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் முலாயம் சிங், மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 முதல் 9 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும்? என்று கேட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பாஜகவின் நரேந்திர மோடி முதல்வராக உள்ள குஜராத்துடன் ஒப்பிட்டு முலாயம் சிங் பேசினார்.

போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என தென்கொரியா கூறியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே, எல்லைப் பகுதியில் வடகொரியா படைகளை குவிக்க தொடங்கியது. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகளும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா நேற்று அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறியுள்ள தென்கொரியா, இதுபோன்ற தொடர் அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
undefined
undefined
undefined

Thursday, March 21, 2013

சிதம்பரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை

சிதம்பரம், மார்ச்.20-

சிதம்பரம் மேம்பாலத்தில் கீழே நேற்று இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பச்சை கலரில் டீ சர்ட்டும், வெள்ளை கலரில் கட்டம்போட்ட சட்டை மற்றும் கட்டம்போட்ட கைலி அணிந்திருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து புரூனியோ மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது.

கடலூரில் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை

கடலூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாறுபட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், ஊராட்சி குழு தலைவருமான மல்லிகா வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், திட்டக்குழு அலுவலர் ஆனந்தன், ஒன்றிய குழு தலைவர்கள் மணிமேகலை பழனிசாமி, ஜெயபால், மணிகண்டன், சுந்தர்ராஜன், செல்வராஜ், சுந்தரிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அபுதாபியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஷாம்ஸ் 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்மூலம் 100 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுமென்றும் சுமார் 20 ஆயிரம் வீடுகள் பயனடையுமென தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிர்மாணிக்க சுமார் 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. மேலும் சுமார் 258,000 கண்ணாட்டிகள் இதற்காக பொருத்தப்பட்டுள்ளன.
இம் மின்சக்தி நிலையத்தின் மொத்த பரப்பளவு 2.5 சதுர கிலோமீற்றகளாகும், இது 285 உதைப்பந்தாட்ட மைதானங்களுக்கு சமனாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியனான ஷேக் கலீபா பின் சயீட் பின் சுல்தான் அல் நயான் இதனை ஆரம்பித்து வைத்தார்.
undefined
undefined
undefined
undefined
undefined

Tuesday, January 15, 2013

பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங்


பாகிஸ்தானுடனான உறவுகள் சுமுகமாக இருக்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் இருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இருநாட்டு உறவுகளும் மோசமடைந்துவருகின்றன.இந்தியப் படைவீரர் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கடந்தவாரம் அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்கு பாகிஸ்தான் படையினரே பொறுப்பு என்று இந்தியா குற்றஞ்சாட்டுகின்றது.
ஆனால் பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
தமது படைவீரர்கள் கொல்லப்பட்ட செயலை காட்டுமிராண்டித் தனமானது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்துள்ளார்.
அண்மைய இருதரப்பு மோதல்களில் பாகிஸ்தான் படைவீரர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள்.
இந்த சம்பவங்களால் இருநாட்டு உறவுகளிலும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாக். பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு


பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்ஐ கைதுசெய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமரையும் அவருடன் சேர்த்து இன்னும் 15 பேரையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.2010-ம் ஆண்டில் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தபோது, அரச செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை பர்வேஸ் அஷ்ரஃப் மறுக்கின்றார்.
இதேவேளை, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிரதமரின் உடனடி பதவி விலக்கலுக்கு வழியமைக்காது என்றே அவதானிகள் பெரும்பாலும் கருதுகின்றனர்.
அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதகுருவான தாஹிருல் காத்ரி ஆயிரக்கணக்கான மக்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார்


அஹ்மதாபாத்:கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்ட வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார். கோத்ரா ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உள்ள வீட்டில் அவரது மரணம் நிகழ்ந்தது. நீரழிவு நோயால் அவதிப்பட்ட உமர்ஜியின் கால் செயலிழந்தது.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக துயர்துடைப்பு முகாம்களை திறந்து பணியாற்றுவதில் முன்னணியில் இருந்த உமர்ஜியை 2003-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் தீவைப்பு வழக்கில் மோடி அரசு அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் முக்கிய சூத்திரதாரி என குற்றம் சாட்டி எட்டு ஆண்டுகளாக உமர்ஜி அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.
ஆன்ம தைரியத்தின் சின்னம் உமர்ஜி என்று பிரபல சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட்  தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

Sunday, January 13, 2013

ஹிஜாப் தனித்தன்மை


http://www.marhum-muslim.com/இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் "person of the year" - "பர்ஸன் ஆஃப் த இயரில்"ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 
உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை.
மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.

Sunday, January 6, 2013

சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம்

undefined3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்துவிட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது பயணங்களை மேற்கொள்ளாமல் தரித்து நிற்கின்றன.
சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது.

ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி


தந்தை கருணாநிதியுடன் மகன் ஸ்டாலின்திமுக தலைவர் மு கருணாநிதி தனக்குப் பின் கட்சியின் அடுத்த தலைவராக தனது இரண்டாவது மகன் ஸ்டாலின்தான் பொறுப்பேற்கவேண்டுமென்ற தனது விருப்பத்தினை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்புகூட ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தான் செய்துவரும் சமுதாயப் பணியினைத் தனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார், அதற்கு எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் கோரியிருந்தார்.தனது வாரிசு ஸ்டாலின்தான் என மீண்டும் கருணாநிதி குறிப்பிடுகிறார் என்று ஊடகங்கள் அப்போது செய்திவெளியிட்டன.
கருணாநிதியின் மூத்தமகன் அழகிரியோ, தனது தந்தை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி "திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசுகள் நியமிக்கப்பட" எனக் கூறினார்.

Thursday, January 3, 2013

அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.(வீடியோ இணைப்பு )

போர்க் கப்பல்களை தாக்கும் அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் கப்பற்படை பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. இதில் பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் கடைசி நாளில் 200 கிலோமீற்றர் இலக்கை தாக்கும் கேதர் என்ற அதிநவீன ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றியில் முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் தன்னுடைய இராணுவ வலிமையை காட்டுவதற்காகவே பரிசோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
undefined

Wednesday, January 2, 2013

சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி

சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி
சென்னை, ஜன. 1-


சென்னையில் இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடும் மாஞ்சா காற்றாடி, அடிக்கடி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த அடுத்தடுத்த அசம்பாவித சம்பவங்களையடுத்து நகரம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மாஞ்சா காற்றாடி விடுபவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காற்றாடி பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே மாஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது என்பதற்கு இன்று நடந்த பலியே சாட்சியாக அமைந்துள்ளது.

8 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மைதானத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்

undefinedபாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
சென்னையில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள்(3ம் திகதி) நடக்கிறது. போட்டிக்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றுள்ளனர்.
கொல்கத்தா மைதானம் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இதுவரை அமைந்திருக்கிறது. இந்தியாவுடன் நடந்த அனைத்து போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவும்- பாகிஸ்தானும் இந்த மைதானத்தில் மோதுகின்றன.

ஐவரி கோஸ்ட் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 60 பேர் பலி

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடந்தது. இசை நிகழ்ச்சிகளுடனும், வான வேடிக்கைகளுடனும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட்.
இந்நாட்டின் பிரதான நகரமான அபித்ஜானில் உள்ள பெலிக்ஸ் ஹூப்பட் போய்னி மைதானத்தில் நேற்றிரவு புத்தாண்டு விழா நடைபெற்றது. வண்ண வண்ண வாணவேடிக்கையைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.