click me

Monday, December 31, 2012

HAPPY NEW YEAR 2013


இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு புதிய செயலாளர்


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் புதிய செயலாளராக ஜுன்னத்மியான் தெருவில் வசிக்கும் G.முஹம்மது மீரான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனத்தை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது செய்திருக்கிறார்.

புதிய செயலாளர் G.முஹம்மது மீரானுக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் , தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் M.S.அலி அக்பர், பொதுச்செயலாளர் O.முஹம்மது கவுஸ், செயலாளர் M.சுல்தான் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தகவல் & படம்: இ.ஐ.ஜ

Saturday, December 29, 2012

நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?


undefinedடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.  அன்று அவர்கள் பேசியது..............




  • லோக்சபாவில் ஆக்ரோசமாக பேசிய பா.ஜ.க எதிர்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்று மிகவும் வேதனையுடன் கூறியதாகவும்,

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாடு: ஆய்வறிஞர்கள் பங்கேற்பு


தமிழ்மொழியை வளர்க்க அதை மற்றவர்களும் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
1வது உலகத்தமிழ் இணைய மாநாடு தொடக்கவிழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது. மொழியியல் உயர் ஆய்வு மையம், உலகத்தமிழ் தொழில் மன்றம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், இங்கிலந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மொழியியல் வல்லுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழ் மென்பொருள் கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது. தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்கியுள்ள 3 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில் கருத்தரங்கு மட்டுமல்லாமல் அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக கண்காட்சி, மக்கள் அரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி,சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.


undefinedடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.மாணவியின் மரணம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இணையத்தின் எதிர்கால ஆளுமை யார் கையில்?"


துபாயில் துவங்கியிருக்கும் இணையம் தொடர்பான ஐநா மன்றத்தின் மாநாட்டில் 193 நாடுகளைச் சேர்ந்த இணையதொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஐநா மாநாடு, உலக அளவில் இணையத்தின் செயற்பாடுகள் குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது.
இந்த மாநாட்டின் கருப்பொருள் இணையமேலாண்மை என்பதாக இருந்தாலும் இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.

வட இலங்கை வெள்ளத்தில் ஏராளமானோருக்கு பாதிப்பு


இலங்கையின் வடக்கே வன்னிபிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு வரையில் இரண்டு தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் இருக்க முடியாமல் வெள்ளம் புகுந்ததனால், 23, 000 பேர் 125 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மன்னாருக்கான பிரதான வீதி, முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவு நகருக்குச் செல்லும் பிரதான வீதி, ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புக்குச் செல்லும் வீதி என்பன வெள்ளத்தினால் மூழ்கியிருப்பதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ரத்தன் டாட்டா ஓய்வு பெறுகிறார்


இந்தியாவின் தொழில்துறைத் தலைவர்களில் மிகவும் அறியப்பட்டவரான ரத்தன் டாட்டா வெள்ளிக்கிழமையோடு பணி ஓய்வு பெறுகிறார்.
ரத்தன் டாட்டாஅவருக்கு எழுபத்தைந்து வயது ஆகிறது. டாட்டா என தனது குடும்பப் பெயரில் அமைந்த ஏராளமான தொழில் நிறுவனங்களின் குழுமத்துக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன் இவர் தலைமை ஏற்றிருந்தார்.
இவர் டாட்டா நிறுவனங்களை இந்த அளவுக்கு வளர்ப்பார் என்று அப்போது பலர் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால் இந்தியாவில் தாராளச் சந்தை சீர்திருத்தங்கள் வந்த நிலையில், அவருடைய தலைமையின் கீழ் டாட்டா நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியும் இலாபமும் கண்டது.

கடலூரில் கடல் அரிப்பு: மீனவர் வீடு இடிந்தது

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூரில் இன்று காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்தும், குளிர்ந்த காற்றும் வீசியது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் கடலூர், தாழங்கூடா, தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால் தேவனாம்பட்டினம் பகுதியில் 4 அடி உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Friday, December 28, 2012

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்


காற்றழுத்த தாழ்வு நிலை நகர்கிறது: கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 1 வாரத்துக்கு முன்பு உருவானது. தமிழக கடலோர மாவட்டம் வரை மேகமூட்டம் பரவி நிற்பதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 

தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷனன் நியமனம்


ஷீலா பாலகிருஷனன், தமிழகத்தின் புதிய தலைமை செயலராக நியமிக்கபடுகிறார். தலைமை செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமைக்கப்படுகிறார்.
கேரளாவை சேர்ந்த ஷீலா பாலகிருஷனன் 1976-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஸ் பணியில் சேர்ந்தார். முன்னதாக இவர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக இருந்தார்.

மலேசியாவில் கடும் வெள்ளம் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு

undefinedமலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகி உள்ளனர், பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
மலேசியாவில் நான்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்வதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இம்மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளதுடன், 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
பகாங் மாகாணத்தில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 26, 2012

பரங்கிப்பேட்டையில் கரூர் வைஸ்யா வங்கி (ATM) இயந்திரம்


தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனதுதானியங்கி காசாளர் இயந்திரம் (ATM) ஒன்றை  பரங்கிப்பேட்டை நகரில் அமைத்துள்ளது. இதற்கான திறப்பு விழா பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் இன்று காலை நடைபெற்றது. தானியங்கி காசாளர் இயந்திரத்தை (ATM)  R.தவ்ஹீத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் உறுப்பினர்கள் அருள்ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர்  கலந்துக் கொண்டனர்.
 பரங்கிப்பேட்டை நகரில் இதுவரை கிளை அமைக்காத கரூர் வைஸ்யா வங்கி தனது காசாளர் இயந்திரத்தை (ATM)   அமைத்திருப்பது பாராட்டுக்குரியது,

Sunday, December 23, 2012

இலங்கையில் மழை வெள்ளத்தினாலும் மண் சரிவுகளினாலும் ஏற்பட்ட மரணங்கள்

undefined
இலங்கையில் மழை வெள்ளத்தினாலும் மண் சரிவுகளினாலும் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையும் மேலும் உயர்ந்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளத்தினால் மண் சரிவுகள் ஏற்பட்ட மத்திய மாகாணத்திலேயே கூடுதலான உயிரிழப்புகளும் ஆட்கள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஈரான் தலைவர் பெயரில் பேஸ்புக் கணக்கு: மர்ம நபருக்கு வலைவீச்சு

undefinedஈரானின் தலைவர் அயதுல்லா அலி ஹாமினியின் பெயரில் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இணைய தளங்களை உபயோகிப்பது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் பல சமூக வலைதளங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தலைவர் ஹாமினியின் பெயரில் கணக்கொன்றை யார் தொடங்கியிருப்பார் என்ற மர்மம் எழுந்துள்ளது.
இதில் அயதுல்லா ஹாமினியின் படங்கள், அவரைப்பற்றிய தகவல்கள், பேச்சுகள் என பகிரப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவித மான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சச்சின் தெண்டுல்கர் , சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதனை உறுதி செய்துள்ளது. ஒருநாள் போட்டிக்கான  உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதன் மூலம், தமது கனவு நிறைவேறியுள்ளதாக பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் சச்சின் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி மற்றும் வீரர்களுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

Saturday, December 22, 2012

டெல்லி அரசு உறுதி பெண்கள் பாதுகாப்புக்கு 4 அம்ச பாதுகாப்பு திட்டங்கள்

புதுடெல்லி, டிச.22-

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் டெல்லி வாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும், இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கும் வகையில் 4 அம்ச பாதுகாப்பு திட்டங்களை டெல்லி அரசு இன்று அறிவித்தது. இரவு வேளைகளில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. குறிப்பிட்ட பாதையை விட்டு பொது வாகனங்கள் விலகிச்செல்லாதபடி கண்காணிக்கும் வகையில் அனைத்து பொது வாகனங்களிலும் ஜி.ஆர்.பி.எஸ். கருவிகளை பொருத்துவது.

தூத்துக்குடியில் பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை 26-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 22-
 
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து  தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
டெல்லியில் பேருந்து ஒன்றில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்காக டெல்லியிலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நாடாளுமன்றத்தில் ஓங்கி குரலெழுப்பியதோடு - நகரிலே உள்ள மாணவர்கள் எல்லாம் அதற்காக இன்று வரை கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்திலே நேற்றையதினம் இந்த அ.தி.மு.க. அரசில், தூத்துக்குடி மாவட்டத்தில், திருவைகுண்டம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதே நிரம்பிய சிறுமி, துடிக்கத் துடிக்க பலாத்காரம் செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, அந்தக் கொடுமையை அவர் வெளியே சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிவழங்கக் கோரி, இன்று காலை முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகள் ரைசினா குன்று பகுதியில் ஜனாதிபதி மாளிகையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை திறந்துக் கொண்டு, உள்ளே நுழைய முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைந்தோடச் செய்தனர். அதிரடிப்படையினர் வாகனங்களின் மூலம் தண்ணீரை பாய்ச்சியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சிதறி ஓட வைத்தனர்.

மத்திய அரசு முடிவு பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை

குரூரமான பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்ச்ர சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.மாலை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விரைவான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் போன், வட்டாரங்கள் தெரிவித்தன.

கனடாவை தாக்கிய பனிப்புயல் ரஷ்யா, உக்ரைனில் கடும் உறைபனி

undefinedகனடாவை தாக்கிய பனிப்புயலால் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.
கனடாவை தாக்கிய பனிப்புயலால், தரையில் 20 செ.மீ உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது.
ஒண்டோரியாவின் கிழக்கிலும், கியூபெக்கின் மேற்கிலும் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.
இதனால் ஹைட்ரோ கியூபெக், ஹைட்ரோ ஒன் மற்றும் ஹைட்ரோ ஒட்டாவா மின்சார நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மின்வெட்டினால் பல சிரமங்களுக்கு உள்ளாயினர்.

தமிழக முதல்வர் குஜராத் செல்கிறார்


குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி வரும் 26-ம் தேதி மீண்டும் பதவி ஏற்கிறார்.
 குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கும் நரேந்திர மோதிக்கு அம்மாநில ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
புதிய அமைச்சரவையுடன் பதவி ஏற்க வசதியாக, மோதி இன்று தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். 26-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சென்னை வந்தார்

இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, 2 நாள் பயணமாக நேற்று பகல் 1.20 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். துணை ஜனாதிபதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை, தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, முப்படை உயர் அதிகாரிகள், மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. சார்பில் ஜின்னா எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோர் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை வரவேற்றனர்.

சன்ரைசர்ஸ் ஐ.பி.எல் அணித்தலைவராக சங்கக்காரா

ஐ.பி.எல் தொடரின் அணிகளுள் ஒன்றான சன் குழுமத்தின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் அணித்தலைவராக குமாரா சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐ.பி.எல் அணியை வாங்கியுள்ள சன் டிவி குழுமம், அதற்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிட்டுள்ளது.
இதன் பயிற்சியாளராக டாம் மூடியும், ஆலோசகர்களாக ஸ்ரீகாந்த், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அணியின் அணித்தலைவரையும் சன் குழுமம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவராக குமாரா சங்கக்காரா அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமையல் குறிப்பு :மட்டன் மசாலா

தேவையானப் பொருட்கள்
undefined
  • மட்டன் -ஒரு கிலோ
  • வெங்காயம்-நான்கு
  • தக்காளி-இரண்டு
  • இஞ்சி-இரண்டு துண்டு
  • பூண்டு-ஆறுபற்கள்
  • பச்சைமிளகாய்-நான்கு
  • மிளகு-ஒரு தேக்கரண்டி
  • சீரகம்-அரைதேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்-இரண்டு தேக்கரண்டி
  • தனியாத்தூள்-இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி
  • தயிர்-அரைக்கோப்பை
  • பட்டை-இரண்டு துண்டு
  • இலவங்கம்-நான்கு
  • ஏலக்காய்-நான்கு
  • கறிவேப்பிலை-இரண்டு கொத்து
  • உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய்-அரைக்கோப்பை   
செய்முறை
  • மட்டனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொண்டு அரைதேக்கரண்டி உப்புத்தூள்,மஞ்சத்தூள்,நசுக்கிய மிளகு சீரகத்தைப்போட்டு ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
  • வாயகன்ற சட்டியில் எண்ணெயை காயவைத்து முதலில் வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு இஞ்சி பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.தொடர்ந்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை தக்காளியை போட்டு நன்கு வதக்கி கொண்டு தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
  • அரைகோப்பை தண்ணிரை ஊற்றி மசாலாவை நன்கு வேகவைக்கவும்.மசாலா எண்ணெய் கக்கும் வரை வேகவைத்து வெந்த கறியை கொட்டி நன்கு கிளறி விடவும்,அடுப்பின் அனலை குறைத்து வைத்து பதினைந்து நிமிடம் அடுப்பில் வைத்துருந்து இறக்கி விடவும்.
  • ஒரு கொத்து கறிவேப்பிலையை மேலாக போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
சப்பாத்தி, சாதம், ரொட்டி போன்றவற்றுக்கு மிக அருமையான ஓரு சைடு டிஷ்.

Friday, December 21, 2012

மாயன் இனத்தவர்கள் கொண்டாட்டம்:உலக அழிவுக்கு விடை(படங்கள்)

உலக அழிவு நாள் என்று உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாயன் காலண்டர் தினத்துக்கு மாயா இனத்து மக்கள் பாரம்பரிய கொண்டாட்டங்களுடன் விடைகொடுத்தனர்.
மெக்சிகோவின் யுகடான் பகுதியில் வாழும் மாயா இனத்தவர்கள் நேற்று காலை முதல் பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்காக தம்மை தயார்படுத்தி வந்தனர்.
மாயன் கலண்டரின் இறுதி நாளுக்கு விடைகொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புதிய யுகம் ஆரம்பமாகுவதாகக் குறிப்பிட்டு பாரம்பரிய வாழ்த்துப் பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.
அவர்களுடைய கணிப்பின்படி இன்றுடன் 400 வருடகால யுகம் நிறைவுக்கு வருகிறது.

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
சவுதியில் சூடானை சேர்ந்த முகமது என்பவர், தங்கி வேலை பார்த்து வந்தார்.
முகமதுக்கும், சக நாட்டுக்காரரான சாலா அகமதுக்கும் இடையில் பிரச்னை உருவானது. இதனையடுத்து அவரை தலையிலேயே அடித்து கொன்றுள்ளார்.
இந்த கொலை குற்றத்திற்காக முகமதுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மெக்கா நகரின் மேற்கு பகுதியில் பொது இடத்தில் வைத்து முகமதுவின் தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதே போன்று கடந்தாண்டு மட்டும் 89 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

உலகம் அழியும் பீதி: கண்ணாடி இழையால் ஆன கூண்டு

மாயன் காலண்டர் டிசம்பர் 21ம் திகதியுடன் நிறைவடைவதால் இன்றுடன் உலகம் அழிந்து விடுமோ என்ற பீதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
undefinedஅது வெறும் கற்பனைதான் உலகம் அழியாது என்று விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இருந்தும் சிலர் அதை நம்ப மறுக்கின்றனர்.
மாயன் இனத்தவர் விண்ணியல் சாஸ்திரத்தில் வல்லுனர்கள். அவர்கள் வகுத்த நியதிப்படி இதுவரை பல விடயங்கள் நடந்துள்ளது. அதுபோன்று இதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர்.
இதற்கிடையே உலகம் அழிய வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் உறுதியாக சொன்னாலும் அதுகுறித்த கண்காணிப்பு பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

மோடி ஒரு மாயை:- முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

தேர்தலின் போது கருத்து தெரிவிப்பது நல்லதல்ல என்பதால் இப்போது கூறுகிறேன், ''குஜராத் ஒளிர்கிறது என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா வருகிறார் நரே‌ந்‌திர மோடி என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்

குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில்,இந்திய ஊடக குழுமத் தலைவரும்,முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ, "மோடி பற்றி கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும்என் கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிப‌‌லித்துவிடக்கூடாதது என்பதால் தவிர்த்து வந்தேன்ஆனால் குஜராத் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்நிலையில் இப்போது என் கருத்தை சொல்லலாம் என்று கருதுகிறேன்.

பேஸ்புக் தளத்தில் கப்பலேரும் மானம்



undefined

 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Wednesday, December 19, 2012

பரங்கிப்பேட்டை கடலில் காற்று பலமாக வீசுவதால் வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதி வெறிச்சோடியது.


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகடலில் காற்று பலமாக வீசியதால் பரங்கிப்பேட்டை பகுதி கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் நேற்று வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதி வெறிச்சோடியது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் விற்பனை செய்கின்றனர். உயர் ரக மீன் வகைகள், இறால், நண்டு உள்ளிட்டவைகள் பெரும்பாலும் அன்னங்கோவிலில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் எப்போதும் கனரக வாகனங்கள் வந்து செல்வதும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 66 புதிய ஆசிரியர்கள் நியமனம்


பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் காலியாக இருந்த 66 இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்வர் ஜெயலிலதா கடந்த 13ம் தேதி சென்னையில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கினார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் புதிதாக 66 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 62 ஆசிரியர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.
ஏற்கனவே காலியாக இருந்த 66 பணியிடங்களும் நிரப்பட்டுள்ளதாக அதிகாரிகள்

thanks:mypno

கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி


இந்திய கிரிக்கெட் அணி மேலும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் இன்று(17.12.12) முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தாலும், தொடரை இங்கிலாந்து 2-1 எனும் கணக்கில் வென்றது.
இந்திய மண்ணில் இங்கிலாந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வென்றுள்ளது.


இதற்கு முன்னர் டேவிட் கோவர் தலைமையிலான அணி 1984-85 ல் நடைபெற்ற தொடரில் வெற்றியீட்டியது.

மழை வெள்ளத்தால் இலங்கையில் 13 பேர் பலி


இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள்.
பல மாவாட்டங்களில் பெரும் பாதிப்புகள்
பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்று அரச அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மாத்தளைப் பகுதியிலேயே அதிகமான அளவுக்கு மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நிலவுடன் மோதும் நாசா

காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் நிலவில் மோதிய இடத்துக்கு, விண்வெளி வீராங்கனை சேல்லி ரைட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காக சிறிய அளவிலான விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டு, ஆய்வு செய்து வருகின்றன.
இதுவரையிலும் விண்வெளி ஓடங்கள் சுமார் 1,14,000 புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த எப், பிளோ என்ற விண்வெளி ஓடங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது.

உலக மக்களில் 80% பேர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய ஆய்வு


மதங்களில் நம்பிக்கை குறையவில்லைஉலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் சுமார் 600 கோடி பேர் மதத்தை சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள், கருத்துக்கணிப்பு மற்றும் பிறப்பு இறப்பு பதிவேடுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

'சன் ரைசர்ஸ்'டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் புதிய பெயர்

undefinedஇந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணிக்கு 'சன் ரைசர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் ஐ.பி.எல் சீசன் தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கில் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஹைதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது.
‘டெக்கான் சார்ஜர்ஸ்' என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது. இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடன்களால் டெக்கான் க்ரானிக்கில் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது.

Tuesday, December 18, 2012

சவுதி இளவரசர் A 380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார் 485 மில்லியன் டாலர் செலவில் பறக்கும் அரண்மனை

undefinedஎண்ணை வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலீத் பின் தலால் மிகப்பெரிய கோடீசுவரர் ஆவார்.
இவர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு .வாங்கியுள்ளார் அதை அரண்மனை போன்று சகல வசதிகளுடன் மிகப் பிரமாண்டமாக மாற்றியமைத்து வருகிறார்.
485 மில்லியன் டொலர் (ரூ.2770 கோடி) செலவில் உருவாகும் இந்த விமானத்தை பறக்கும் அரண்மனை என்று அழைக்கின்றனர்

Monday, December 17, 2012

சீனாவின் புதிய சாதனை தெளடாட்டிஸ் குறுங்கோள், கண்டுபிடிப்பு

விண்வெளியில் குறுங்கோள் ஒன்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது சீனாவின் சாங்கி-2 விண்வெளி ஓடம்.
சூரியனை சுற்று வரும் குறுங்கோள்களை புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்வதற்காக சாங்கி-2 என்ற விண்வெளி ஓடத்தை சீனா அனுப்பியது.
தற்போது பூமியிலிருந்து 70 லட்சம் கிலோமீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருந்த "தெளடாட்டிஸ்" என்ற குறுங்கோளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

Sunday, December 16, 2012

அமெரிக்காவில் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்(படங்கள்)

அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிசூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கி சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என ஜனாதிபதி ஒபாமாவுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கனெக்டிகட் மாகாணம் நியூடவுன் பகுதியில் உள்ள சான்டி ஹூக் தொடக்கபள்ளியில், ஆடம் லான்சா என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
பின்னர் அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

வருகிற 21ஆம் திகதியுடன் உலகம் அழியப் போகிறதா

வருகிற 21ஆம் திகதியுடன் உலகம் அழியப் போகிறது என ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்த சிலரை சீன பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாயன் காலண்டர் படி, வருகிற 21ஆம் திகதி உலகம் அழியப் போகிறது என நம்பும் சீனர்கள் ஒண்றிணைந்து பல ஊர்களில் கூட்டம் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இவர்கள் சீனாவின் மத்திய பகுதிகளிலும், மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் இவ்வாறு கூட்டம் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி, இவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Friday, December 7, 2012

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்


ஜப்பானில் கிழக்கு கடற்கரையின் ஹொன்சு தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 5.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 7.3ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பக்கூடும் என கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானில் பெரும் அளவு உயிர்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்படும் அளவிற்கு பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தைக் கண்டித்து நாளை தஞ்சை, நாகை, திருவாரூரில் பந்த்


தஞ்சாவூர்: தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் 300 இடங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
உச்சநீதிமன்றம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு தொடர்ந்து உத்தரவு மேல் உத்தரவு பிறப்பித்து வருகிறது. பிரதமரும் சொல்கிறார், காவிரி கண்காணிப்புக் குழுவும் சொல்கிறது... ஆனால் எந்த உத்தரவையும் மதிக்க முடியாது, தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. உத்தரவுகளை செயல்படுத்த அது முனைந்தால் அரசியல்கட்சிகள், விவசாயிகளைத் தூண்டி விட்டுப் போராட்டம், வன்முறை என்று பாதை மாறிப் போவதால் பிரச்சினை மேலும் மேலும் வலுத்து வருகிறது.

Thursday, December 6, 2012

சுவீடனின் பல பகுதிகள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது (படங்கள் )

கடும் பனிப்புயல் காரணமாக சுவீடனின் பல பகுதிகள் ௦பாதிக்கப்பட்டுள்ளதால், நோபல் பரிசு பெற வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
சுவீடனில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று முன்தினம் முதல் பனிப்புயல் வீசியதால் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
இதனால் தலைநகர் ஸ்டாக்ஹோம் உள்பட பல நகரங்கள் பனியில் மூடின. முக்கியமாக விமான நிலையம் ஸ்தம்பித்ததால், ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
எனவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வர இயலாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் நிர்வாகிகள் கூறுகையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப இங்கு பல்வேறு கருத்தரங்கு, மாநாட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், பனிப்பொழிவு காரணமாக தாமதமாகிறது என்றனர்.

இந்தியாவில் சில்லறை வர்த்தக அந்நிய முதலீடு: வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி


இந்திய நாடாளுமன்றம்இந்தியாவில் சில்லறை வர்த்தகத் தொழில்துறையை டெஸ்கோ வால்மார்ட் போன்ற வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது என இந்திய அரசாங்கம் எடுத்த முடிவு தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த முக்கிய வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது.
அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தை வாக்கெடுப்பில் வென்றதம் மூலம் அரசாங்கம் முறியடித்துள்ளது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 253 வாக்குகளும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் விழுந்துள்ளன.
சர்வதேச சூப்பர்மார்க்கெட்டுகள் சந்தைக்குள் வந்தால் இந்தியாவின் சிறு கடைகளும் தொழில்களும் நசுங்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
ஆனால் சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடு வந்தால் நாட்டில் பொருளாதார வளர உதவும் என்று அரசாங்கம் வாதிடுகிறது.