click me

Wednesday, November 28, 2012

Saudi Government directive fingers prints of all departing passengers even on Exit reentry Visa.

As Received.

Dear Friends,


We have received the following announcement from FTA, please be more prepared when you travel next time,

As per a new Saudi Government directive fingers prints of all departing passengers even on Exit reentry Visa will also be taken while leaving the kingdom of Saudi Arabia at the Immigration Counters while stamping the Passports.

Due to this new procedure adopted by the authorities it is taking more time & long queues at the Immigration, most of airlines have started closing Check-In counters 2 hours before flight departures, so are requesting Passengers to report at the Airport at least minimum 4 hours before flight departure to ensure timely check in and boarding.

தெரிவுக்குழுவுடன் சச்சின் சந்திப்பு: ஓய்வு பெற தயார்?

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்பேன் சச்சின் டெண்டுல்கர் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
39 வயதான டெண்டுல்கர் கிரிக்கெட்டின் சதசாதனை உட்பட பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். தனது 23 ஆண்டு கால தொடர் பயணத்தில் அவர் அனைத்து சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் அவரது ஆட்டம் மோசமாகவே உள்ளது. நியூசிலாந்து மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் அவரால் சிறப்பாக ஆட முடியவில்லை. ஓட்டங்கள் எடுக்க மிகவும் திணறுகிறார்.
துடுப்பாட்ட நுணுக்கம் அனைத்தையும் பயன்படுத்துவதில் வல்லவரான அவர் சமீப காலங்களில் அதிகமாகவே போல்டு ஆகி விடுகிறார்.

ஷேவாக் 100 தங்க நாணயங்களை பரிசாக பெறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர ஷேவாக் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2வது போட்டியில் விளையாடியதன் மூலம் ஷேவாக் இந்த சாதனையை எட்டினார்.
இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 100 தங்க நாணயங்களை வழங்க டெல்லி கிரிக்கெட் சங்கம் இன்று முடிவு செய்துள்ளது.
வரும் ஜனவரி 6ம் திகதி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியின்போது, ஷேவாக்கிற்கு அந்த தங்க நாணயங்கள் வழங்கப்படும்.
மேலும், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வாயில் அல்லது கேலரிக்கு ஷேவாக் பெயரை வைக்கவும் கிரிக்கெட் சங்க தலைவர் சேட்டன் சவுகான் முன்மொழிந்துள்ளார்.

சவுதி அரேபிய தூதர் ஏமன் நாட்டில் சுட்டுக்கொலை


சவுதி அரேபிய தூதர் ஏமன் நாட்டில் சுட்டுக்கொலைமத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா, பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள ஏமன் நாட்டுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றது. இந்நிலையில் ஏமனில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் அந்நாட்டு காவலருடன் தலைநகர் சானாவில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏமன் நாட்டு காவலர் போல் உடையணிந்திருந்த ஒரு தீவிரவாதி சுட்டதில் தூதர் மற்றும் அவரது காவலர் இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ஜிகாதிஸ்ட் இயக்கத்தினர், ஏமனில் செயல்பட்டு வரும் அல் கொய்தாவுடன் இணைந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Tuesday, November 27, 2012

தீ விபத்து: துணை ஆட்சியர், மற்றும் செல்வி ராமஜெயம் நேரில் ஆய்வு!

பரங்கிப்பேட்டை: ஜெயின் பாவா தர்கா வளாகத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த திடீர் தீவிபத்தில் மிட்டாய் நானா வீடு என்று அறியப்படும் ஒரு குடிசை வீட்டின் முக்கிய ஆவனங்கள், ரொக்கப் பணம், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தீக்கிரையாயின. தீவிபத்தினால் ஏற்பட்ட சேதத்தினை நேற்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பார்வையிட்டனர்.
இதனையடுத்து இன்று துணை ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான செல்விராமஜெயம் நேரில் ஆய்வு செய்து பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மதுவிடம் சேதவிபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பிறகு, துணை ஆட்சியர் மற்றும் செல்வி ராமஜெயம் தலா ரூபாய் 5 ஆயிரத்தினை தீவிபத்தினால் இழப்புக்கு ஆளான மும்தாஜ் கலிமா என்பவரிடம் வழங்கினர். அப்போது, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, ஜமாஅத் நிர்வாகிகள், 1-வது வார்டு கவுன்சிலர் யூ. ஹபிபுர் ரஹ்மான், 11-வது வார்டு கவுன்சிலர் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 1-வது வார்டு கவுன்சிலர் ஹபிபுர் ரஹ்மான் சகோதரர் யூ. ஹுசைனுல் ஆபிதீன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனுஸ் முன்னிலையில்  ரூபாயிரம் 5 ஆயிரம் வழங்கினார்.

த.மு.மு.க. நகரத் தலைவராக ஜி.ஹசன் அலி தேர்வு!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. பொதுக் குழு நேற்று மாலை 7 மணி அளவில் ஹபீபுல்லா மினி மஹாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. வின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் கூட்ட முடிவில், அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வலியுறுத்துதல், பக்கீர்மாலிமார் பள்ளிவாசல் குளம்  தூர்வாரி சுத்தம் செய்ய பேரூராட்சியை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் பட்டியல்:

சிங்கப்பூர் சிலாட் சாம்பியன்: தங்கம் வென்றான் பரங்கிப்பேட்டை சிறுவன்

சிங்கப்பூர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலாட் சாம்பியன்காண போட்டி நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிலாட் செண்டெங் பெலளாங் அணியின் சார்பாக   பங்கு பெற்ற முஹம்மது கெவின் என்கிற பரங்கிப்பேட்டை சிறுவன் பங்கு கொண்டான். இவன் அணியை சார்ந்த மாணவனை வீழ்த்தி ஜூனியர் சிறுவர்களுக்கான  தங்கப் பதக்கம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றான்.

கடந்த 4 மாதங்களில்பயிற்சி பெற்று குறுகிய காலத்திலேயே தங்கம் வென்று  பாராட்டினைப் பெற்றுள்ள இச்சிறுவன் பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவைச் சார்ந்த குல் முஹம்மது அவர்களின் பேரனும் ஜி.எம். மரக்கச்சி மரைக்காயரின் மகனும் ஆவான்.

பரங்கிப்பேட்டை: மர்ஹூம் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் !

வண்டிக்காரத்தெருவில் மர்ஹூம் மாமு என்கிற அப்துல் ஹமீது சாயபு 

அவர்களின் மனைவியும் , அப்துல் ரசீது என்கின்ற குலாம் கவுஸின் 

தாயாரும் ,அஷ்ரப் அலி ,முஹம்மத் ஆரிப் ,இர்ஷாத் அஹமதுடைய பாட்டியாருமான பாத்திமாபீவி என்கின்ற 

தல்பாதர் நாச்சியார் மர்ஹுமாகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று 

மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில் .


இன்னலில்லாஹி ........................................................

Monday, November 26, 2012

சென்னையில் தரையிரங்கிய விமானத்தின் டயர் வெடித்தது

Oman_Airways.jpgஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று காலை 11.45 மணி அளவில் 146 பயணிகள், 9 சிப்பந்திகளுடன் விமானம் வந்தது. தரை இறங்கி ஓடுபாதையில் விமானம் ஓடிய போது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் விமானம் குலுங்கியது. 

பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். விமானி சாமர்த்தியமாக ஓடுபாதையில் சரியான இடத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து 155 பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் மதியம் 12-30 மணிக்கு ஓமன் நாட்டுக்கு திரும்ப வேண்டிய அந்த விமானம் தாமதமாக இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து


பரங்கிப்பேட்டை, நவ 26: பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி ஜெயின் பாவா தைக்கால் பகுதியை சேர்ந்த கோழிக்கடை முஸ்தபா அவருடைய குடிசை வீடு (மிட்டாய் நானா வீடு) நேற்று நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் தீபிடித்து எரிந்தது. இதயனையறிந்த அக்பக்கதினர், தீயனைப்பு துறையினரரும் சேர்ந்து தீயைனைந்தனர்.


இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் அவருடைய மகளின் பிரசவத்திற்க்காக தண்டல் (வட்டிக்கு) மூலம் வாங்கி வைதிருந்த ரூபாய்.9,000/- பணம் உள்பட ரூ.1 லட்சம்  மதிப்புள்ள பொருட்கள் சேதம்யடைந்துயுள்ளன. தற்போது உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

தீவிபத்திற்க்கான காரணம் இதுவரை காரணம் தெரியவில்லை பரங்கிப்பேட்டை பேலீசார் வழக்கு பதிந்து விசராணை செய்து வருகின்றனர்.

பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை


பரங்கிப்பேட்டை, நவ 26: சிதம்பரம் வண்டிகேட் -பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிதம்பரம் வண்டிகேட்- பு.முட்லூர் வரை புறவழிச்சாலையில் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


பஸ் போக்குவரத்து துவக்கப்படாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சி.முட்லூரில் அரசு கல்லூரி, ராகேவேந்திரா கல்லூரி, மோட்டார் வாகன அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளது. பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம், கடலூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் அதிகளவில் இங்கு படித்து வருகின்றனர். 

கும்மத்பள்ளி புதுப்பிக்கும் பணி - குழு அமைப்பு


ஜாமிஆ மஸ்ஜித் புதுப்பள்ளியை விரிவாக்கம்  புதுப்பிக்கும் பணி தொடர்பாகஆலோசனைக்கூட்டம் இன்று காலை  பத்து மணி அளவில் முத்தவல்லி, H. J.பஷீர் அஹமது தலைமையில் நடைப்பெற்றதுபரங்கிப்பேட்டை பேரூராட்சிமன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ்இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தலைவர் டாக்டர் S. நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றஇக்கூட்டத்தில் ஜமாஅத் நிர்வாகிகள்,  அனைத்து பள்ளி நிர்வாகிகள்ஊர்பொதுமக்கள் கலந்துக்கொண்டார்கள்சுமார் 45 நிமிடம் நடைபெற்றஇக்கூட்டத்தில்  பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை புதுப்பள்ளியின்வளர்ச்சிக்காக வழங்கினார்கள்
 இக்கூட்டத்தில் பள்ளி கட்டுமானப்பணிக்காக  எட்டு பேர் கொண்ட கமிட்டிஅமைக்கப்பட்டது.

புலனாய்வுத்துறை இயக்குநராகும் முதல் இஸ்லாமியர்


புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும்.  இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் சீனாவில்

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன��

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை விட மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும். 

220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்ட 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் இக்கட்டிடம் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கட்ட தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 அடுக்கு மாடிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனமே இதை கட்டி தனது சாதனையை முறியடிக்கிறது. 

இதில், அதே கட்டுமான கலைஞர்களும், என்ஜினீயர்களும் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உலகில் உள்ள மிக உயரமான 20கட்டிடங்களில் 9 கட்டிடங்கள் சீனாவில் உள்ளன.

பனேசர் அபாரம்:இங்கிலாந்து பந்துவீச்சில் சுருண்ட இந்தியா

மும்பை டெஸ்டில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுருண்ட இந்திய அணி தோல்வியை நோக்கி செல்கிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ஓட்டங்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பங்களாதேஷ் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி(படங்கள்)

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஜவுளி தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

துபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மாலையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
துபாய் நகரில் முகமது பின் ராஷித் என்ற சிட்டியை உருவாக்க இருக்கின்றனர். இங்கு பல்வேறு குடியிருப்புகளும், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மாலையும் கட்டவுள்ளனர்.
இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாலுக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள மால்கள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, November 24, 2012

செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அதிரடி உத்தரவு


செல்போனில் நள்ளிரவில் பேசினால் கட்டண சலுகை வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
செல்போனில் நள்ளிரவு அழைப்பது, எஸ்எம்எஸ் அனுப்புவது, இன்டர்நெட் பயன்படுத்துவது போன்ற சேவைகளுக்கு செல்போன் நிறுவனங்கள் கட்டண சலுகை வழங்குவது உலகம் முழுவதும் நடக்கிறது.
இதை இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். குறைந்த கட்டணத்தில் நள்ளிரவில் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகின்றனர்.

சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 14 பேர் பலி

சீனாவில் உணவு விடுதியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஷாங்சி மாகாணத்தில் உள்ள இந்த உணவு விடுதியில் மக்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரம் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்துக்கு காஸ் கசிவே காரணம் என கூறப்படுகிறது.
விபத்து நிகழ்ந்த போது சம்பவ இடத்திலேயே 6 பேரும், மருத்துவமனையில் 8 பேரும் பலியானார்கள்.
47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து காரணமாக உணவு விடுதியின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது.

Friday, November 23, 2012

விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா


 road is built around house after elderly chinese couple
பெய்ஜிங்: சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.
லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.

அமெரிக்காவில் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து(படங்கள்)


அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொலிவு ஏற்பட்டுள்ளது

பனிப்பொலிவின் தொடர்ச்சியாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டதால் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
வானகங்கள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக மோதி நிற்கின்றன. இதனால் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குளான வாகனங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பரங்கி பேட்டை : முட்லூர் "ரப்பானியா" சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்!


நவ 23: பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பி.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே "ரப்பானியா சூப்பர் மார்க்கெட்" உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு அதன் உரிமையாளர் சபிருல்லாஹ் மற்றும் ஊழியர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூபாய்.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், அழுகு சாதனைப் பொருட்கள், அரிசி மூட்டைகள், காலணிகள் மற்றும்  அலமாரிகள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. 

மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்துயிருக்கலாம் என்ற கோணத்தில் பரங்கிப்பேட்டை பேலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
thanks:tntjpno

An ultrasound scan shows a foetus yawning in the womb.


An ultrasound scan
shows a foetus

yawning in the
womb. Scientists
have found that
unborn babies not
only hiccup,
swallow and stretch
in the womb, they
yawn too.
Researchers who
studied 4D scans of
15 healthy foetuses
also said they think
yawning is a
developmental
process which could
potentially give
doctors a new way
to check on a baby's
health.

Saudi Post to start remittance service by June

1353506211940858200.jpgSaudi Post will launch a new service allowing customers to transfer money through the post office’s 65 branches in the Kingdom. The new service for international transactions will start in June 2013, while the local transactions service will be launched in June 2014.
Mohammad Benten, chairman and president of Saudi Post, said this project would be a part of Saudi Post Holding. “Statistics showed that expats in Saudi Arabia transferred about $ 27 billion (SR 101 billion) in 2010. There are about 8.4 million expats in Saudi Arabia, making up 31.1 percent of the total population,” said Benten.
He added: “Our new service would mean a great leap in the Saudi Post services, especially for expats. Expats now spend a lot of time waiting in line at banks. Banks also close during weekends and Eid holidays.
Saudi Post’s new service would allow users to have full access to money transfer services at any time.”

வீரபாண்டி ஆறுமுகம் மறைவு கருணாநிதி கண்ணீர்


வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கருணாநிதி கண்ணீர்: மிகப்பெரிய தூணை இழந்து விட்டோம்
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிர்ச்சி  அடைந்தார். உடனடியாக  போரூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி  ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார்.
 
துக்கத்துடன் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மிகப்பெரிய  தூணை தி.மு.க. இழந்து விட்டது. போர்ப்படை தளபதியை தி.மு.க.  இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார்.

கடலூர் சிப்காட் ஆபத்தான ரசாயன ஆலைகளை மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூரில் உள்ள ஆபத்தான ரசாயன ஆலைகளை மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 
கடலூர் சிப்காட் பகுதியிலுள்ள ஆர்க்கீமா பெராக்சைட்ஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த ஆலையிலிருந்து ரசாயனம் பரவியதால் அப்பகுதியில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கடலூர் சிப்காட் பகுதியில் கெம்பிளாஸ்ட், ஆர்க்கீமா போன்ற ரசாயன தொழிற் சாலைகளை தொடங்க திட்டமிடப்பட்டபோதே, நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சு ஆலைகளுக்கு அனுமதி அளித்தால், அப்பகுதிகளில் வாழும் மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரித்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினேன்.

Thursday, November 22, 2012

பரங்கிப்பேட்டையில் மய்யத் செய்தி....

அஸ்ஸலாமு அலைக்கும்

பரங்கிப்பேட்டையில் மய்யத் செய்தி....

காஜியார் தெருவில் மர்ஹூம் முஹம்மது மெய்தீன் அவர்களின் மகளாரும் மர்ஹூம் அப்துல்லாஹ் சாஹிப் அவர்களின் மனைவியும் , அப்துல் ரஹ்மான் முஹம்மது உசேன் ,முஸ்தபா கமால் ஆகியோரின் தாயாருமாகிய
அஹமது நாச்சியார் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

நடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பயணி ஒருவரின் உதவியுடன் விமானம் தரையிரக்கப்பட்டது.
அயர்லாந்து நாட்டிலிருந்து ஜேர்மனியின் பிராங்கபர்ட் நோக்கி 262 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென சக விமானிக்கு தலைவலி ஏற்பட்டு, தனது பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
உடனே விமான ஊழியர்கள் பயணிகளிடம் இங்கு மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? என கேட்டனர். ஆனால் மருத்துவர்கள் யாரும் இல்லை.
அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவை சேர்ந்த விமானி ஒருவர் இந்த விமானத்தில் பயணித்தார். அவர் அனைத்து விமானங்களையும் ஓட்டும் தேர்ச்சி பெற்றவர் என்றது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பயணி, டப்ளின் நகரில் விமானத்தை தரையிறக்கினார். அங்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விமானம், பிராங்கபர்ட் நோக்கி புறப்பட்டது.

ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்து: 10 பேர் பலி(படங்கள்)

ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அருகே உள்ள விமான தளத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது.
அப்போது இயந்திரம் பழுதானதால் அருகே உள்ள அல்-ஹசாபா பகுதியில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பக்கவாதம் அறிகுறிகளும், ஆபத்தும்..!

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு
பக்கவாதம் அறிகுறிகளும்,ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!! 

உலகம் முழுக்க 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக மிக அவசியம். நடை பயிலும் குழந்தை முதல், நடக்க தள்ளாடும் தாத்தா வரை யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம். 

மின்னல்போல் திடீரென்று இந்த நோய் மனித மூளையை தாக்குவதால் ப்ரெயின் அட்டாக் என்கிறோம். பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். நரம்புகள் மூளையிலும், தண்டுவடத்திலும் ஆரம்பித்து தசைகளை இயக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ ப்ரெயின் அட்டாக் ஏற்படும். 

Wednesday, November 21, 2012

காசாவில் போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புதல்


இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும், காசாவில் ஜிம்டி நேரப்படி புதன் கிழமை இரவு 7 மணிக்கு அமலுக்கு வரக்கூடிய ஒரு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருக்கின்றன.
இது குறித்த அறிவிப்பு ஒன்றை, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில், கெய்ரோவில், எகிப்திய வெளியுறவு அமைச்சர், மொஹமத் கமெல் அம்ர் வெளியிட்டார்.
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது.
போர் நிறுத்தத்துக்கு ஒரு வாய்ப்பு தர தான் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெடன்யாகூ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நிறுத்தும் ஒரு முயற்சியில், காசா நிலப்பரப்பு மீது இஸ்ரேல் கடந்த எட்டு நாட்களாக குண்டுமழை பொழிந்த நிலையில் இந்தப் போர் நிறுத்தம் வருகிறது.

புவனகிரி மற்றும் 3 தொகுதியில் போட்டியிட்ட விவகாரம்: ஜெ. மீதான வழக்கை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்

 supreme court quashes criminal proceedings against jaya டெல்லி: கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது              .கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதியை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும் கோரியிருந்தார்.

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலருக்கு மூச்சுத்திணறல்

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலருக்கு மூச்சுத்திணறல்கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று மாலையில் கொதிகலன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் பதற்றத்துடன் வெளியேறினர். தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த தொழிற்சாலையில் இருந்த மற்றொரு கொதிகலனும் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த ரசாயன புகை காரணமாக  பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதில் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இறப்பு செய்திகள்,

மேட்டுத் தெரு, மர்ஹும் காஜா மக்தூம் அவர்களின் மகளாரும் மர்ஹும் M.G. முஹம்மது யுசுப் அவர்களின் மருமகளாரும் மர்ஹும் M.Y. ஜெய்னுல்லாபுதின் அவர்களின் மனைவியும் Z. அபுபக்கர் மௌலானா, Z. காஜா நஜிமுத்தீன், Z. ஷேக் அலாவுத்தீன் இவர்களின் தாயாருமாகிய தாஜுன்னிசா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு மிராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கேரி பேக்குகளை அப்புறப்படுத்தினர்.


டெங்கி நோய் ஒழிப்பு பணியில் தீவிர முனைப்புடன் பணியாற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அவ்வப்போது சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அவ்வாறே கடலூர் மாவட்டத்தை "மக்கும்  தன்மையற்ற நெகிழி பயன்படுத்தாத மாவட்டமாக மாற்றுவதிலும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றார். 
அந்த வகையில், சிதம்பரம் நகரில் வர்த்தக நிறுவனங்களில்  கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னு செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண்கள் விவகாரத்தில் நடவடிக்கை

பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது தொடர்பாக மும்பையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார்.
சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அச்சத்தினால்தான் இந்த கடையடைப்பு என்றும், மரியாதைக்காக அல்ல எனவும் சஹீன் தாதா என்ற பெண் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது தோழி ரேனு லைக் (LIKE) செய்துள்ளதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார், பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால் இருவரையும் விடுவித்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு, மகாராஷ்டிரா முதல்வர் சவானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
எனவே இந்த விவகாரம் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை இன்று தனக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு நிறைவேற்றம்

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை கடந்த செப்ரெம்பர் மாதம் 29ம் திகதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Tuesday, November 20, 2012

அப்பாவிகளின் குடும்பங்களை அழைத்து வந்து அவமானப்படுத்தும் “சொல்வதெல்லாம் உண்மை“!

அப்பாவிகளின் குடும்பங்களை அழைத்து வந்து அவமானப்படுத்தும் “சொல்வதெல்லாம் உண்மை“!

பொதுவாக பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே
  



  டீவிக்காரர்களின் இலக்கு . அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா.. நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்குமூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள்ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள். 

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீ குடிப்பதனால்
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். 

கிரீன் டீயின் நன்மைகள்........ 

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. 

பரங்கிப்பேட்டையில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் கனகசபை சாவு

பரங்கிப்பேட்டையில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு: 2 பேர் உயிர் தப்பினர்
பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர்கள் கனகசபை (வயது 48), முத்தையன் (50), கண்ணன் (31), மீனவர்கள். நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும் முத்தையனின் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலுக்குள் சென்றபோது ராட்சத அலை எழுந்தது.
இதனால் கடலில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 3 மீனவர்களும் நீரில் மூழ்கினர். உடனே முத்தையனும், கண்ணனும் நீச்சலடித்து கரையை அடைந்தனர். நீண்டதூரம் நீந்தியதால் கரையிலேயே மயங்கி விழுந்து விட்டனர்.
2 பேரையும் அந்த பகுதி மீனவர்கள் மீட்டனர். கனகசபையின் கதி தெரியாமல் அவரது குடும்பத்தினரும், பிற மீனவர்களும் கலங்கினார்கள். கடலில் மூழ்கி இறந்த கனகசபையின் உடல் இன்று அதிகாலையில் கரை ஒதுங்கியது. அவரது உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
பரங்கிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கனகசபை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிமுல்லா ஷா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.                                              
நன்றி : my pno

Monday, November 19, 2012

இறப்பு செய்திகள்,


அஸ்ஸலாமு அலைக்கும் !

1 )  கோட்டாய் தெருவில் மர்ஹூம் P. முஹம்மது மஸ்தான் அவர்களின் 

பேத்தியும் , மர்ஹூம் M.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் மகளாரும் ,

சிதம்பரம் பல் டாக்டர் . E. முஹம்மது இசாக் அவர்களின் மனைவியும் ,

முஹம்மது உசேன் , முஹம்மது ஹனீபா ,ஜாபர் அலி இவர்களின் சகோதரியும் ,

மாலிக் , நாஜர் , நஜீப் இவர்களின் தாயாருமான ஆரிபுன்னிசா அவர்கள் 

மர்ஹூமாகிவிட்டார்கள் .இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு 

நல்லடக்கம் கிதர் நபி பள்ளியில் .


இன்னாலில்லாஹி .....................


அஸ்ஸலாமு அலைக்கும் !


2 ) கொல்லங்கடை தெறுவில் மர்ஹூம் சாப்ஜி சாஹிப் உடைய மகளாரும் ,

மர்ஹூம் ரஹ்மான்சா உடைய மனைவியும் ,மர்ஹூம் காட்டு  ராஜாவின் தாயாரும் 

A. K .சேக் முஹம்மது , A.K.T.அன்சாரி உடைய பாட்டியாருமாகிய ஐசாபி அவர்கள் 

மர்ஹுமாகிவிட்டார்கள் . இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு 

நல்லடக்கம் மீராப்பள்ளியில் .

இன்னலில்லாஹி .....................................