NILAM
சென்னை: வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே, 500 கி.மீ., மற்றும் இலங்கையின் திரிகோணமலைக்கு வட கிழக்கில், 100 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நீலம் புயல் சென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், மிகப்பெரிய அளவில் அலைகள் எழும்புகின்றன.