click me

Wednesday, October 17, 2012

கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்:பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்கடலூர், அக். 17-

கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து பூஜ்ஜியக்கழிவு மேலாண்மை கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பண்ருட்டி நகரில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசும்போது கூறியதாவது:- இன்று உலகை அச்சுறுத்தும் மிக பெரிய ஆபத்து ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் ஆபத்தாகும். குறிப்பாக இடு பொருட்கள் குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வரை பூமியில் மக்காமல் இருப்பதால் மழைநீர் பூமிக்குள் செல்லாமல் கடலுக்கு வீணாகச் செல்கிறது. 

மேலும் கால்நடைகள் இப்பொருட்களை உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. உணவகங் களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. பொதுமக்களுக்கு அதிக அளவில் புற்றுநோய் வருவதற்கு இடுபொருட்களே காரணமாகும். மேலும் கடலுக்குள் இப்பொருட்கள் செல்வதாகல் கடல் வாழ் உயிரினங்கள் இவற்றை உட்கொண்டு உயிரிழக்கின்றன. 

மேலும் மனிதர்கள் இத்தகைய மீன்களை உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே இத்தகைய ஆபத்தான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எந்த ஒரு புது நடைமுறையும் முதலில் தன்னிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை குறைத்து பூஜ்ஜியக் கழிவு மேலாண்மை திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்படுகறிது. இங்கிருந்து நகராட்சிக்கு குப்பைகளை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சேகரிக் கப்படும் குப்பைகளை பிரித்து அவற்றை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தங்களது வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். 

அதேபோன்று உங்களது ஊராட்சிக் குட்பட்ட அனைத்து வீடுகளிலும் உள்ள குப்பை களை தரம் பிரித்து பூஜ்யக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 

எனவே 2013 ஜனவரி திங்களுக்குள் கடலூர் மாவட்டத்தை பூஜ்ஜியக் கழிவு மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள் கிற«ன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மனற் தலைவர் கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், துப்புறவு பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உதவி இயக்குனர் கதிரேசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

அனைவருக்கும் மரங்களை நடுவோம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

1 comment:

  1. பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ய வேண்டும் என்று எவ்வளவு தான் பல தரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 'சுய மனித ஆர்வம்' இருந்தால் தான் இவ்வகையான நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும்!
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: http://pnonazim.blogspot.com/

    ReplyDelete