click me

Friday, August 31, 2012

ராம்(RAM: Random Access Memory): செயல்பாடுகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் Memory and Storage ஆகும்.
இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும்.
பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
ராம்(RAM: Random Access Memory):
இதனை ஒத்த தொழில்நுட்ப சொற்கள் Memory, Random Access Memory, Short Term Memory, DDR Memory, DDR2 Memory, DDR3 Memory மற்றும் மேலும் சில.
பயன்பாடு:
தற்காலிகமாக புரோகிராம்கள் கையாளும் தகவலினைத் தேக்கி வைக்கவும், மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது.
இதில் பதியப்படும் தகவல்கள்(டேட்டா), புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.
இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும்.
ராம் மெமரி சரியாக இயங்க தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால் அனைத்து தகவல்களும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.
எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும்.
DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.

ஆளில்லா உளவு விமானங்களை அறிமுகப்படுத்த இராணுவம் திட்டம்

ஆளில்லா உளவு விமானங்களை வானில் பறக்க விட்டு பயங்கரவாதிகளின் நடவடிக்கையை கண்காணிக்க இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.
தற்போது சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றது.
அமெரிக்கா தனது நாட்டில் இருந்து கொண்டே ஆப்கானில் ஆளில்லா உளவு விமானங்களை கண்காணிக்க விட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் இதில் இணைய உள்ளது.
இதற்காக 20 விமானங்களை சப்ளை செய்ய இராணுவம் சர்வதேச அளவில் டெண்டரை வெளியிட்டுள்ளது.
10 கிலோவுக்கும் குறைவான எடையுடன் கூடியதாக, 1,000 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியவையாக இந்த விமானங்கள் இருக்க வேண்டும் என்று அந்த டெண்டரில் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தரையிலிருந்து வானில் கிளம்பி தொடர்ந்து 1 மணி நேரமாவது அது பறக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காட்டுப் பகுதிகளில் நக்ஸல்களைக் கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்த மத்தியப் படைகள் திட்டமிட்டுள்ளன.

ஈரான் துறைமுகத்தை விரிவுபடுத்தும் இந்தியா; சீனாவுக்கு செக்

ஈரானின் ஷா பஹார் துறைமுகத்தை விரிவாக்குவதன் மூலம் இந்தியா- ஈரான் இடையே வர்த்தக உறவு அதிகரிப்பதுடன் இது சீனாவிற்கு செக் வைக்கும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.
ஈரானுடன் இந்தியா தனது வர்த்தக உறவை அதிகரிக்க விரும்புகிறது.
இதன் அடிப்படையில் ஈரானில் ஷா பஹார் என்ற துறைமுகத்தில் ரூ.400 கோடியை முதலீடு செய்கிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான், சீனா இரண்டு நாடுகளுக்கும் மறைமுகமான செக் வைக்கிறது இந்தியா.
இந்தியாவின் தற்போதைய நிலை
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றிய அனைத்து நாடுகளிலும் இந்தியாவுக்கெதிராக தமது இராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது சீனா.
இதே போல் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்கு கடல்வழியே கொண்டு செல்லப்படுகிற எண்ணெய் போக்குவரத்துக்கு இடையூறு எதுவும் வந்துவிடாத வகையில் பாகிஸ்தானின் கத்வார், மாலைதீவுகள் மற்றும் இலங்கையின் அம்பந்தோட்டா ஆகிய பகுதிகளில் சீனா கடற்படையை நிலை நிறுத்தி இருக்கிறது.
வரும் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையே மோதல் உருவானால் சீனாவின் கடல்வழி எண்ணெய் போக்குவரத்துக்கு எங்கும் பாதிப்பு வராது.
ஆனால் இந்தியா தம்மை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் நட்பு நாடுகள் என்று நம்பிக் கொண்டே ஏமாந்து கொண்டிருக்கிறது.
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கையே.. இலங்கை இப்பொழுது சீனாவின் முழுமையான ஆதிக்கம் உள்ள நாடாகவே மாறிவிட்டது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சரே அந்நாட்டுக்கு சென்று இராணுவ முகாம்களைப் பார்வையிடும் அளவுக்கு இலங்கை சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது.

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காதர் பாட்ஷா என்ற வெள்ளைச்சாமி 70, தமிழ்நாட்டின் கமுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இன்று காலை அவரது வீட்டிற்கு தனஞ்செயன் என்ற நபர் வந்தார்.
இவர் தன்னிடமிருந்த அரிவாளை எடுத்து காதர் பாட்ஷாவை சரமாரியாக வெட்டி சாய்த்தார். வீட்டிற்குள்ளேயே இந்த சம்பவம் நிகழ்ந்தமையால் காதர் பாட்ஷாவின் குடும்பம் சப்தமிட்டார்கள்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கொலையாளி தனஞ்செயனை பிடித்து அடித்து உதைத்தனர். இவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்த தீவிர விசாரணையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் துவக்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


அந்த அணு உலையை செயல்படுத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகளில் எரிபொருளை நிரப்புவதற்கும், மின் உற்பத்தியைத் துவக்குவதற்கும் நீதிமன்றம் அனுமதியளி்த்துள்ளது.
கூடங்குளம்அந்த அணு உலைகளில் மத்திய, மாநில அரசுகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.
அதே நேரத்தில், அந்த உலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பாக, உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அணுத்திறன் ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நீதிதிகள் பி. ஜோதிமணி மற்றும் எம். துரைசாமி ஆகியோர் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

பெண் எம்.எல்.ஏ.வுக்கு 28 ஆண்டு சிறை; குஜராத் கலவரம்


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்ட 32 பேருக்கான தண்டனை விவரங்களை ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
அதன்படி, ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மாயாபென் கொட்நானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரிமினல் சதித்திட்டம், கொலை உள்பட பல்வேறு குற்றங்களுக்காக, முதலில் 10 ஆண்டுகளும், அதையடுத்து 18 ஆண்டுகளும் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
முதல் முறையாக, குஜராத் கலவரத்தில், பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து இயக்கமான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி., தனது ஆயுட்காலம் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று முழு நிலவு நாள் 'நீல நிலவை'க் காணத் தவறாதீர்கள்!


டெல்லி: இன்று முழு நிலவு நாள். இன்றைய தினம் இரவில் வானத்தைப் பார்த்தால் ஒரு ஆச்சரியம் உங்களுக்குக் காத்திருக்கும். அதாவது இன்றைய இரவு தோன்றும் நிலாவுக்கு ப்ளூ மூன் என்று பெயர்.
இப்படி 'நீல நிலவாக' நமது சந்திரன் காட்சி தருவது என்பது அரிதான ஒரு விஷயம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட நீல நிலவைக் காண முடியும்.
வழக்கமாக வருடத்திற்கு 12 முறை பவுர்ணமி வருவது வழக்கம். சில சமயம் 13 பவுர்ணமி வரும். அப்படிப்பட்ட சமயத்தில், வரும் நிலவுக்குத்தான் நீல நிலவு என்று பெயர்.
அப்படியானால் நிலா நீல நிறமாக காட்சி தருமா என்று கேட்கலாம். அப்படி இல்லை. வழக்கம் போலத்தான் இருக்கும். இருப்பினும் சில சமயங்களில் வளி மண்டலத்தின் பரவிக் கிடக்கும் தூசு மண்டலம் காரணமாக நிலவின் நிறம் லேசான நீல நிறத்தில் இருப்பது போலத் தோன்றும். மற்றபடி வழக்கம் போலத்தான் இந்த முழு நிலவும் வெண்மையாக இருக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் முழு நிலவுக்கு வானியல் நிபுணர்கள் ஒரு பெயர் வைத்துள்ளனர். அதன்படி 12 முழு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. அதேசமயம், 13வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் எந்த மாதத்தில் 2 முறை முழு நிலவு வருகிறதோ அப்போது இந்த ப்ளூ மூன் வரும்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதிதான் ஒரு முழு நிலவு வந்தது. இன்று 2வது முழு நிலவு என்பதால் இதை ப்ளூ மூன் என்கிறோம்.
இன்றைக்கு விட்டால், அடுத்து 2015ம் ஆண்டு ஜூலை மாதம்தான் ப்ளூ மூன் வருகிறதாம். எனவே இன்றைய இரவை மறக்காமல் விசேஷமாக்குங்கள்....



புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் இரத்தங்களையும் குடிக்கின்றன;பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்...

புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் இரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின் பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும். சிங்களம் இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால் மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது.
இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர், பர்மாவில் வாழ வந்த முஸ்லிம்கள் பர்மிய இராணுவம் - புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.
இரு நாட்டிலும் பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என பிரித்துக்கொண்டுள்ளது.
கடவுள் இல்லை என்ற புத்தனை கடவுளாக்கி, அதை ஓர் மதமாக்கி, அதன் பெயரில் ஏன் தான் இவ்வளவு படுகொலைகளோ?
உலகின் கறுப்புச் சரித்திரத்தில் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், மதக்கோட்பாட்டால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய படுகொலைகளின் பூர்வீகம் தான் பர்மா.
பர்மா இராணுவ ஜனநாயகவாதிகளால் ஆளப்படும் நாடு. தேசியமயமாக்கப்பட்ட நதிகள். அதனால் இயற்கையில் வறுமை என்பதே இல்லை.

சவூதி அரேபிய அணியில் உள்ள அனைவரும் திருடர்கள்: நடிகர் பிராங்கி

பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள சவூதி அரேபிய அணியைப் பார்க்கும் போது திருடர்கள் போலத் தெரிகின்றனர் என ஸ்காட்லாந்தை சேர்ந்த நகைச்சுவை நடிகர் பிராங்கி பாயில் தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டனில் பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது.
இது குறித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த நகைச்சவை நடிகர் பிராங்கி பாயில் டிவிட்டரில் சில விஷமத்தனமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சவூதி அரேபிய அணியைப் பார்க்கும் போது அவர்களில் பலரும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அதாவது கை ஊனமுற்றோரைப் பார்த்துத் தான் இவ்வாறு பேசியுள்ளார் பிராங்கி. திருட்டுத்தனம் செய்து அதற்குத் தண்டனையாக கைகளை வெட்டி தண்டனை கொடுத்துள்ளதைப் போல அவர்கள் இருக்கிறார்களாம். இதன் மூலம் சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனைகளை கொடுப்பதை சுட்டிக் காட்டுகிறாராம்.
இவரின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஊனமுற்றோரையும், சவூதி அரேபிய சட்டத்தையும் இவர் அவமதித்துள்ளார், இழிவுபடுத்தியுள்ளார் என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பிராங்கியைக் கடுமையாக கண்டித்து பலரும் டிவிட்டரில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

Thursday, August 30, 2012

சிதம்பரம் நீதிமன்றத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆஜர்!

சிதம்பரம், ஆக.30: சட்டப்பேரவை தேர்தல் குறித்த வழக்கு ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இருவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமினில் வெளிவந்தனர்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கடந்த 11-4-2011 அன்று தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கூட்டணியில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலைநகர் தபால்நிலையம் முன்பு வாரப்பத்திரிகைகள் 5ஆயிரம் பிரதிகளை இலவசமாக விநியோகித்ததாக மூமுக தலைமை நிலையச் செயலாளர் ஜி.செல்வராஜ் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன், கோவி மணிவண்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை சிதம்பரம் நடுவர்-1 நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஆஜராக கே.பாலகிருஷ்ணன், கோவி.மணிவண்ணன் ஆகியோருக்கு நீதிமன்றம் வாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து மேற்கண்ட இருவரும் சிதம்பரம் நடுவர்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

கிரிக்கெட்டிலிருந்து ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஓய்வு


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவித்துள்ளார்.
அண்மைய காலங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு வெற்றிகரமான தலைவராக ஸ்ட்ராஸ் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் உள்நாட்டிலும், ஆஸ்திரேலியாவிலும் அடுத்தடுத்த வெற்றிகளை அவர் தலைமையிலான அணி பெற்றது.
ஆனாலும் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து இந்த மாதத்தில் அந்த இடத்தை இழந்தது.
மேலும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸுக்கும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போனது. இவைகளை அடுத்தே அவர் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவு வந்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து அணியின் தலைவராக ஆலிஸ்டர் குக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தான் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவது என்று எடுத்த முடிவு, தனக்கும் அணிக்கும் நல்லது என்று ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா புதிய சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் வெகு விரைவாக 3,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார் தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா.
57 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் 3031 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், 69 ஒருநாள் ஆட்டங்களில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
வீரட் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் இப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மேற்கிந்தியத் தீவுகளின் கார்டன் கிரினிட்ஜ் ஆகியோர் 72 ஆட்டங்களில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்து 3-வது இடத்தில் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 124 பந்துகளில் 150 ஓட்டங்களை(16 பவுண்டரிகள்) ஆம்லா எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அவரது அதிகபட்ச ஓட்டமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டமும் இதுதான்.

இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல் : 9 பேர் உயிரிழப்பு

ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடுவானில், இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், விமானப் படை வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.  பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானப்படை ஹெலிகாப்டர்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.

சிதம்பரத்தில் பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சிதம்பரம், ஆக., 30 : சிதம்பரம் சிவசக்தி நகர், முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் (35). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் இல்ல திருமணத்துக்காக கடலூர் சென்றிருந்தார் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து சுமார் 9 பவுன் நகை, மற்றும் 42 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிதம்பரம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்களும், போலிஸாரும் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Baby born in plane toilet named after Emirates airline


DUBAI: An Emirates flight from Dubai to Manila was forced to make an emergency landing in Vietnam after a Filipina delivered a baby in the aircraft toilet, XPRESS has learnt.
Pilots landed the Boeing 777 (EK332) at Ho Chi Minh City’s Tan Son Nhat airport after mid-day on August 22 to offload the Filipina mother, identified as ‘Nedz’, and her new-born son, whom the parents planned to name ‘EK’ (the Emirates airline code), for emergency treatment.
The baby was delivered thousands of feet over Indo-China and about two-and-a-half hours before expected touchdown in Manila. EK was born pre-term at 27 weeks.
The incident caused a minor commotion on board. Two Filipina nurses on the flight jumped out of their seats to assist in the mid-air delivery.
HIGHER CALLING
“I was sitting beside them,” Karen Caballes-Santos, one of the two nurses, told XPRESS. A licensed nurse in the Philippines, she flew back to Manila unexpectedly after finding a job in Dubai, though not as a nurse.That day, she was supposed to fly to Kish Island in Iran for a visa-change run. “My visit visa was running out. But then, I found out that on the day I was supposed to fly to Kish there were just five months left on my passport’s validity. I was super sad because I went home empty-handed. Little did I know there was a ‘higher’ purpose for what happened.”

Wednesday, August 29, 2012

எம்.எஸ்.விக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா! 'திரையிசைச் சக்கரவர்த்தி''...


சென்னை: சென்னையில் இன்று மாலை நடந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரையிசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
 jaya gives new title msv நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் வழங்கப்பட்ட பட்டம் மெல்லிசை மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். இன்றும் கூட இதயங்களில் அவர்களது பாடல்கள் ஒலித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் உள்ளன.

பயணிகள் விமானம் கடத்தல்; from Spain to Amsterdam hijacked: Dutch media report


AMSTERDAM: Dutch media are reporting that a passenger plane has possibly been hijacked en route from Malaga in Spain to Amsterdam"s schipol airport
News website Nu.nl reports that the plane was escorted to Schiphol on Wednesday by two F16 Fighter jet. The report cited the defense ministry. 

Nu.nl reports that the plane is from carrier Vueling. 

Airport authorities did not immediately return calls seeking comment. 

No further details were immediately available. 

விளையாட்டு வீரர்களுக்கான விருதுளை இன்று ஜனாதிபதி வழங்குகிறார்

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பட்டியல் ஏற்கனவே மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு விட்டது.
இதன்படி விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜய்குமார், யோகேஷ்வர்தத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாராட்டுசான்றிதழுடன், ரூ.7.5 லட்சம் பரிசும் கிடைக்கும்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உட்பட 25 வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெறுகிறார்கள். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் தலா ரூ.5 லட்சம் அளிக்கப்படும். இது தவிர 8 பயிற்சியாளர்கள் துரோணாச்சார்யா விருதுக்கும் தெரிவாகி உள்ளனர்.
விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மேற்கண்ட விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

கஸாப்புக்கு தூக்கு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்


கஸாப்மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜையான முகமது அஜ்மல் அமிர் கஸாப்பின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்ற கஸாப் தரப்பு வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
கஸாப் மிக்கடுமையான குற்றச் செயலலில் ஈடுபட்டதாலும், நாட்டுக்கு எதிராக போர் தொடுத்ததாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதைத் தவிர எங்களுக்கு மாற்று வழி இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் சி.கே. பிரசாத் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

A சான்றிதழ் பெற்ற படங்கள் டிவியில் ஒளிபரப்ப தடை

இந்திய திரைப்பட தொழிற்துறையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஏ சான்றிதழ் பெறும் சினிமாக்களை, எந்த தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பக் கூடாது என்று புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.
சில படங்கள் மறுபடியும் தணிக்கைக்கு உட்படுத்தி யு சான்றிதழ் பெற்று அதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் முறைக்கும் சினிமா தணிக்கை வாரியம் நோ சொல்லியுள்ளது.
இந்த புதிய விதிமுறை, சினிமா தயாரிப்பாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திரைப்படத்தை எடுக்கும் தயாரிப்பாளருக்கு,சாட்டிலைட் உரிமம் மூலமாக மிகப் பெரிய தொகை கிடைக்கும். ஆனால் இந்த புதிய விதியால் அதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

குஜராத் கலவரம் : 32 பேர் குற்றவாளிகள், 29 பேர் விடுதலை

அகமதாபாத், ஆக., 29 : 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த நரோடா பாட்டியா கலவரத்தில் 95 பேர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த கலவரம் குறித்து சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களில் 32 பேரை குற்றவாளிகள் என்றும், 29 பேர் நிரபராதிகள் என்றும் விடுதலை செய்துள்ளது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம்.

பாராலிம்பிக் போட்டி இன்று துவக்கம் சாதிக்குமா இந்தியா


inspire-a-generation_29லண்டன்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி, லண்டனில் இன்று துவங்குகிறது. இதில், இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை கைப்பற்ற காத்திருக்கின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், சமீபத்தில் 30 வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இங்கு, 14வது பாராலிம்பிக் போட்டி இன்று துவங்கி, செப்., 9 வரை நடக்கவுள்ளது. இதில் 166 நாடுகளைச் சேர்ந்த 4,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
பிஸ்டோரியஸ் நம்பிக்கை:

அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில்;Isaac என்ற பெரும் புயலால் விமான பயணங்கள் ரத்து


pyal_28_8
Isaac என்ற பெரும் புயல் தென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் விமானங்கள் சிலவற்றை ரத்து செய்தும், சிலவற்றை நேர மாறுதலுக்கு உட்படுத்தியும் உள்ளன.பயணிகள் அனைவரும் தங்கள் பயணத்தை தொடங்கும் முன்னர், நேர மாறுதலை கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  அமெரிக்க மற்றும் கனடாவில் உள்ள வெளியுறவு செயலகங்கள் தங்கள் நாட்டு மக்களை மிகவும் அத்தியாவசிய காரணங்கள் இருந்தால்மட்டும், விமான பயணத்தை மேற்கொள்ளுமாறும், இல்லையென்றால், புயல் கரையைக் கடக்கும்வரை விமானங்களில் செல்வதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மெக்சிகோ வளைகுடாவில், Morgan City, La., to Indian Pass, Fla. போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணங்களை கண்டிப்பாக தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
Miami, Fort Lauderdale and Fort Myers in Florida, போன்ற நகரங்களுக்கு செல்லும் West Jet விமானங்களும், Cuba, Jamaica, Miami, Fort Lauderdale and New Orleans போன்ற இடங்களுக்கு செல்லும் ஏர் கனடா விமானங்களும் புயல் நிலைமையை அனுசரித்தே கிளம்பும் என அந்த நிறுவங்கள் தெரிவித்துள்ளன.  மியாமி மற்றும் பியர்சன் நகரங்களுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ஞாயிறு அன்று ரத்து செய்யப்பட்டன. ஏர் கனடா பயணிகள் தங்கள் பயண திட்டத்தை மாற்றுவதற்கு அதிகப்படியான எவ்வித கட்டணமும் வசூலிக்காது எனவும் அறிவித்துள்ளது.

கடலூர் ; பள்ளியில் கால்பந்து விளையாடிய போது அடிபட்டு மாணவன் பலி

 ஆக., 29 : கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி அருகே விழப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி முருகனின் மகன் பரதன்  பள்ளி விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் இன்று காலை கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பரதனின் முகத்தில் பந்து விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் கடலூர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் : கார் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற மாருதி கார் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகி உள்ளனர். திண்டுக்கலில் இருந்து கரூர் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில், நல்லமணார்கோட்டை கிராசிங் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மாருதி கார் கடந்து ‌கொண்டிருந்தது. வேகமாக வந்த ரயில், மாருதி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த சரண்யா(30) மற்றும் முருகேசன் (40) சம்பவ இடத்திலேயே பலியாயினர். மனோகரன் (35), அவரது குழந்தை ஹசிகாஸ்ரீ (1) படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ‌மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா ;14,000 கி.மீ., சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது.

missle_29பீஜிங்: கண்டம் விட்டு கண்டம் பாயும், அதி நவீன, 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஏவுகணையை சீனா, நேற்று பரிசோதித்தது. வல்லரசு நாடான சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு போட்டியாக அதி நவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. கடலுக்கு அடியில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரி நாட்டை தாக்கும் வகையிலான ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து பார்த்தது சீனா. இந்நிலையில், “டோங்பெங்-41′ என்ற 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று பரிசோதித்தது. இந்த ஏவுகணை 10 அணுகுண்டுகளை சுமந்து செல்லும் வல்லமை பெற்றது. ஏவுகணை படை பிரிவில் பெண்கள் குழுவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக, சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை தாக்கும் வகையில் இலக்காக கொண்டு இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Car crash sparks blaze at petrol station on Emirates Road


Dubai: A major disaster was averted at a petrol station on Emirates Road yesterday thanks to the speedy response of Dubai Civil Defence and police to a fire.
The fire broke out at the Enoc petrol station near the Fruit and Vegtable Market interchange on Emirates Road in the direction of Abu Dhabi when a car crashed into one of the pumps, an official at Dubai Civil Defence told 
The official said two cars were burnt before the fire could be contained. The fire was reported at 3:52pm. The incident led to a massive traffic jam during the evening rush hour.
The fire was brought under control within seven minutes of being reported, officials added. Fire-fighters from Al Qusais and Al Rashidiya responded to the situation.

9 மருத்துவ ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் எலி கடித்து குழந்தை முகம் சிதைவு?


சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில், பிறந்து சில நாட்களில் இறந்த ஒரு குழந்தையின் முகத்தில் எலி கடித்ததாகக்கூறி அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் இருந்து குழந்தையின் உடலை வாங்க மறுத்த சம்பவத்தில், கஸ்தூரிபாய் மருத்துவமனையின் இரண்டு மருத்துவர் உட்பட 9 மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைமருத்துவமனையில் இறந்த ஒருவரின் சடலத்தை, பிரேதப் பரிசோதனை தேவையில்லாத சமயங்களில், உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றாத காரணத்தினாலும், இறந்த குழந்தையின் சடலம் சவக்கிடங்குக்குள் பாதுகாப்பாக வைக்கப்படாத காரணத்தினாலும் இவ்வூழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழக சுகாதார அமைச்சரும் சுகாதாரத்துறை அரசு செயலரும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை சென்று நடத்திய ஆய்வில், குழந்தை இறந்த பிறகே அதன் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Tuesday, August 28, 2012

'பத்ம' விருதுகளுக்கு டிராவிட், கம்பீர் பரிந்துரை

இந்தியாவின் உயரிய விருதுகளான 'பத்ம பூஷண்', விருதுக்கு ராகுல் டிராவிட் மற்றும் 'பத்ம ஸ்ரீ' விருதுக்கு கவுதம் கம்பீர் பெயரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கவுதம் கம்பீர், சமீபகாலமாக டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவர், பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட், சர்வதேச போட்டிகளில் 24 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்;தீண்டாமையற்ற கிராமத்துக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு

சென்னை, ஆக., 28 : தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 31 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அது குறித்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், தீண்டாமையை அறவே ஒழிக்கும் வகையிலும், அனைத்து மக்களும் சுதந்திரமாக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையிலும், தீண்டாமை இல்லாத வகையில் செயல்படும் கிராமங்களை, மாவட்டத்திற்கு ஒரு கிராமம் (சென்னையைத் தவிர) என்ற வகையில் 31 கிராமங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கிராமத்திற்கும் 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை இராக்கில்

பாக்தாத், ஆக.28: இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்பட 21 பேருக்கு நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் இராக்கில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மரண தண்டனை அளிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவேயில்லை. இந்த ஆண்டில் இதுவரை 91 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் இதுபோல அதிக எண்ணிக்கையில் மரண தண்டனையை இராக் நிறைவேற்றியுள்ளது. கடந்த ஜனவரியில் 17 பேருக்கும் பிப்ரவரியில் 14 பேருக்கு ரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இராக்கில் நீதிமன்ற நடைமுறைகள் வெளிப்படையானதாக இல்லை. இதனாலேயே அங்கு அதிக எண்ணிக்கையிலானோருக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்தார்.

டேங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியது.

திருவனந்தபுரம், ஆக., 28 : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அம்பலம் பகுதியில் நேந்று நள்ளிரவு சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் மற்றும் க்ளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டேங்கர் லாரி வெடிக்கும் போது அருகில் இருந்த கடைகளும், வாகனங்களும் கூட தீப்பிடித்து எரிந்தன. இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

தேர்தல் கருத்து கணிப்பு: ஆந்திராவில் ஜெகன் அலை, ம.பி, சட்டீஸ்கரில் பாஜக வெல்லும்


டெல்லி: இந்தியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து என்டிடிவி ஒரு சர்வே நடத்தியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 18 பெரிய மாநிலங்களில் 125 தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. Ipsos என்ற தனியார் சர்வே அமைப்புடன் இணைந்து என்டிடிவி நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் 30,000 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை நேற்று முதல் என்.டி.டி.வி. ஒளிபரப்பி வருகிறது. என்டிடிவி அதிபரும் மூத்த பத்திரிக்கையாளருமான பிரணாய் ராய் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை வழங்குகிறார். வரும் 31ம் தேதி வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
நேற்றிரவு ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிஸ்ஸா மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் விவரங்களை பிரணாய் ராய் வெளியிட்டார்.
(இதில் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2013) சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல ஆந்திரா மற்றும் ஒடிஸ்ஸா மாநிலங்களில் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கவுள்ளது.)

787 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வரவேற்க ஏர் இந்தியா ரெடி!


பல தடைகளுக்கு பின்னர் முதல் போயிங் 787 ட்ரீம்லைனர் வரிசையின் முதல் விமானத்தை ஏர் இந்தியா டெலிவிரி பெறுகிறது. இந்த நவீன ரக விமானம் நாளை இந்தியா வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 27 787 ட்ரீம்லைனர் விமானங்களை ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்தது. இழப்பீடு வழங்குவதற்கான போயிங்- ஏர் இந்தியா இடையிலான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட இழுபறியால் இந்த விமானங்களை டெலிவிரி பெறுவதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டது.
இதேபோன்று, இந்த நவீன ரக விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதில் ஏர் இந்தியா நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகார்களால் விமானிகள் 58 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பிரச்னைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து தற்போது முதல் 787 ட்ரீம்லைனர் விமானத்தை ஏர் இந்தியா டெலிவிரி பெறுகிறது.
இதற்காக, ஏர் இந்தியா விமானிகள் குழு கடந்த வாரம் அமெரிக்கா சென்றுள்ளது. முதல் விமானம் நாளை இந்தியா வந்தடைகிறது. அடுத்து ஓரிரு வாரங்களில் இன்னும் 2 விமானங்களை ஏர் இந்தியா பெற இருக்கிறது. எந்தெந்த வழித்தடங்களில் இந்த விமானங்களை இயக்குவது என்பது குறித்து ஏர் இந்தியா விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.
போயிங் 787 ட்ரீம்லைனர் சிற்பபம்சங்கள்:
அதிக எரிபொருள் சிக்கனம், நவீன கட்டமைப்புடன் தயாராகும் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 210 முதல் 250 பயணிகள் பயணிக்க முடியும். ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 1000 இரட்டை எஞசின்கள் கொண்ட இந்த விமானம் அதிகபட்சம்  14,200 கிமீ முதல் 15,200 கிமீ வரை பறக்கும் திறன் கொண்டது.

Saudi king Abdullah Bin Abdul Aziz had gone abroad for a holiday.


Riyadh: Saudi Arabia’s Crown Prince Salman Bin Abdul Aziz has temporarily taken charge of running the world’s top oil exporter for the first time, after the royal court said on Monday King Abdullah Bin Abdul Aziz had gone abroad for a holiday.
“We deputise, according to our order, Crown Prince Salman to manage state affairs and oversee the interests of the people during our absence from the kingdom,” said a royal court statement carried by Saudi Press Agency.
The brief statement did not say where King Abdullah, who is 89, had gone, or how long he was expected to be abroad in a country where the health of senior royals is keenly watched.
Salman was appointed Abdullah’s heir in June after the deaths of two crown princes, Sultan and Nayef, in eight months.

எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா பேச்சு;பணத்துக்காக பாராளுமன்றத்தை முடக்கும் பாரதீய ஜனதாவுக்கு பதிலடி கொடுங்கள்:


பணத்துக்காக பாராளுமன்றத்தை முடக்கும் பாரதீய ஜனதாவுக்கு பதிலடி கொடுங்கள்: எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா பேச்சுபுதுடெல்லி, ஆக.28- 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாராளு மன்றத்தில் தினமும் அமளி செய்து வருகின்றன. 

பிரதமர் மன்மோகன்சிங் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள போதிலும் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. 
 
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா புதிய வியூகத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி உள்ளார். அதன்படி இன்று காலை அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டினார். எம்.பி.க்களுக்கு ஆலோசனை தெரிவித்து அவர் பேசியதாவது:- 

ரூ.1800 கோடிக்கு முறைகேடுகள் கிரானைட் குவாரிகளில்


கிரானைட் குவாரிகளில் ரூ.1800 கோடிக்கு முறைகேடுகள்: தமிழக அரசுக்கு மதுரை கலெக்டர் இடைக்கால அறிக்கைமதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1800 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள் ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசுக்கு மதுரை கலெக் டர் அன்சுல்மிஸ்ரா இடைக்கால அறிக்கை அனுப்பி உள்ளார்.
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில் 18 தனிக்குழுக்களை அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

க்யூரியாசிட்டி அனுப்பிய குரல் பதிவு

வாஷிங்டன், ஆக., 28 : செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலத்துக்கு, நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து அனுப்பிய குரல் பதிவு சென்று சேர்ந்தது. அதனை க்யூரியாசிட்டி அங்கு ஒலித்தது. செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல் ஒலிப்பதை பதிவு செய்து க்யூரியாசிட்டி மீண்டும் பூமிக்கு அனுப்பியது.
நாசாவின் செய்தித் தொடர்பாளர் சார்லஸ் போல்டன் கூறுகையில், நிலாவைத் தவிர, அடுத்த ஒரு கிரகத்தில் இருந்து மனிதக் குரல் ஒலிப்பது இதுவே முதல் முறை என்று பெருமையாகக் கூறினார்.

டிஎன்ஏ மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்


குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும்குற்றம் நடந்துள்ள இடமொன்றிலிருந்து கிடைக்கும் டிஎன்ஏ மரபணுப் பொருட்களைக் கொண்டு சந்தேகநபர் ஒருவரின் தலைமயிர் மற்றும் கண்களின் நிறங்களை கண்டறிய கூடிய தடயவியல் பகுப்பாய்வு முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிடைக்கின்ற டிஎன்ஏ தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது போகின்ற பட்சத்தில், குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறங்களை கண்டறிய முடிவதன்மூலம் சந்தேகநபர்கள் பற்றிய முக்கிய தரவுகள் கிடைக்கும் என்று இந்த சோதனை முறையைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் குழுவினர் நம்புகின்றனர்.உதாரணத்துக்கு, ஒரு குற்றச்செயல் தொடர்பில் பலர் மீது சந்தேகம் ஏற்படுகின்றபோது, அவர்களில் பிரதான சந்தேகநபர்களை குறிப்பாக ஊகித்து வரையறை செய்வதற்கு இந்த சோதனை முறை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.