பரங்கிப்பேட்டை: தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லுர், திருவொற்றியூரிலும்,சேலம், ராசிபுரம்,திருச்செங்கோடு, ஒசூர் வட்டாரத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. மேலும் பரங்கிபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலும் மழை பெய்துள்ளது வெப்ப சலனத்தால் ஏற்பட்ட இந்த மழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment