click me

Saturday, August 18, 2012

டி20 உலகக் கிண்ணம்: புதிய சீருடையுடன் இந்திய வீரர்கள் தயார்



இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை டி20 உலகக்கிண்ணப் போட்டியை முன்னிட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது.
டி20 போட்டிகளுக்கான புதிய சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது.
டெஸ்ட் போட்டிகளுக்கு வெள்ளை, ஒருநாள் போட்டிகளுக்கு நீலநிற சீருடைகள் என தனித்தனியாக உள்ளதைப் போல், இனி இந்திய அணி பங்கேற்கும் டி20 போட்டிகளில் வீரர்கள் இந்த புதிய சீருடையை அணிவர். புதிய சீருடையின் இடது தோள் பகுதியில் இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ணம் இடம்பெற்றுள்ளது.
புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள அதிரடி வீரர் யுவராஜ் சிங், புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ், நான் பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் சிறப்பாக பயிற்சி பெற்றுவிட்டேன். எனினும் ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் ஆடாததால் நான் சற்று பதற்றமாகவே உள்ளேன். மேலும் இந்தியாவுக்காக முதல்முறையாக ஆடுவதைப் போல நான் உணர்கிறேன் என்றார்.
புதிய சீருடையை வரவேற்றுள்ள அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறுகையில், இது ஒரு நல்ல தொடக்கம். இப்போது போட்டிகளுக்கிடையே தகுந்த இடைவெளி உள்ளது. இதனால் நாங்கள் உடலளவிலும், மனதளவிலும் சிறப்பாக தயாராகி இருக்கிறோம் என்றார்.
சீருடையில் தேசியக் கொடியின் வண்ணங்கள் இருப்பது வீரர்களுக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும் எனவும், இதனால் அணியின் தேவையை உணர்ந்து, வீரர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள் எனவும் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.
இவர்கள் தவிர வீராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, இர்பான் பதான், அஜின்கியா ரகானே போன்ற வீரர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment