click me

Friday, August 17, 2012

தென்னாப்பிரிக்க சுரங்க ஊழியர் ஆர்ப்பாட்ட வன்முறையில் 30 பேர் பலி


சுரங்க ஊழியர் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது
தென்னாப்பிரிக்காவின் மரிகானா பிளாட்டினம் சுரங்கத்தில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் செய்த சுரங்க ஊழியர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக 
சுரங்க ஊழியர் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது.அந்நாட்டின் காவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கத்தியும், கம்பும் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்களைக் கலைக்கச் பொலிசார் செய்த முயற்சி தோல்வியடைய அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது.தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் அதிகம் பேர் உயிரிழந்த பொலிஸ் நடவடிக்கை இந்த சம்பவம்தான் என்று கூறப்படுகிறது.
சுரங்க ஊழியர்களின் ஊதியம் தொடர்பான ஆர்ப்பாட்டங்களின் கொதிகலனாக இருந்துவருகின்ற இந்த பிளாட்டினம் சுரங்கம் லோன்மின் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
ஒன்றோடு ஒன்று போட்டி போடும் இரண்டு தொழிற்சங்கங்கள் இடையிலான பகைமை காரணமாக இங்கு பதற்ற நிலை ஏற்படிருந்தது.
ஒரு வாரம் முன்பு ஆரம்பித்திருந்த இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஏற்கனவே நடந்த வன்சம்பவங்களில் பத்து பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment