
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சி காலத்தில் (2004-2009) நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. கடந்த 2004 ஆம் ஆண்டிலேயே நிலக்கரித் துறைச் செயலர் ஏலம் மூலமே சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துறை செய்தும் அரசு அப் பரிந்துறையை ஏற்காமல் ஒரு குழு அமைத்து மனுக்களை பரிசீலித்து சுரங்கங்களை ஒதுக்கியது.
அதிலும் குறிப்பாக பிரதமர் மன் மோகன் சிங்
நிலக்கரித் துறைக்கு நேரடிப் பொறுப்பு வகித்த சமயத்தில் பல சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது.
அரசு, தணிக்கை அதிகாரியின் கணக்கீட்டை நிராகரித்துள்ளது. அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 57 சுரங்கங்களில் ஒரு சுரங்கம்தான் தற்போது நிலக்கரி உற்பத்தியை துவக்கியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தணிக்கை அதிகாரியின் கருத்தோடு அரசு முழுதாக உடன்படவில்லை என்றார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் ஏற்பட்ட உத்தேச நஷ்டம் என்பது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கை குறிப்பிட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கிறது. சுரங்க ஒதுக்கீட்டில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர், டாடா, ஜிண்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அரசின் முடிவால் பெறும் லாபம் அடைந்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment