click me

Sunday, August 19, 2012

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பைத்துல்மால் கமிட்டி கூட்டு ஃபித்ரா வினியோகப் பணிகள் மும்முரம்!



பரங்கிப்பேட்டை ; பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பைத்துல்மால் கமிட்டி ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட உள்ள 13-ம் வருட கூட்டு ஃபித்ரா வினியோகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. சுமார் 650 சகோதர-சகோதரிகளுக்கு வழங்கப்பட உள்ள உணவு, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரே பை - யில் வழங்க ஏதுவாக பேக்கிங் பணிகள் நேற்று இரவு நடைபெற்றது.
இன்று இரவு வழங்கப்பட உள்ள ஃபித்ரா வினியோகத்தின் போது, ஃபித்ரா வாங்கும் நபர்களையோ ஃபித்ரா பெறுவதையோ புகைப்படம் எடுக்க இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தடை விதித்துள்ளது. 
 
 
 
 
 
 
 
இதில், உணவுப் பொருட்களான கீழ்கண்டவைகள் அடங்கிய பைகள் தயார் நிலையில் உள்ளது.
உணவுப் பொருட்கள்:- அரிசி - 5 கிலோ, சீனி - 1 கிலோ, மைதா - 1 கிலோ, சம்பா கோதுமை - 500 கிராம், சமையல் எண்ணெய் - 500 மில்லி, வனஸ்பதி நெய் - 200 கிராம், புண்டு - 100 கிராம்,  மிளகாய்தூள் - 200 கிராம், மல்லிதூள் - 200 கிராம், மஞ்சள்தூள் - 50 கிராம், மசாளாதூள் - 50 கிராம், சத்துமாவு - 1 பாக்கெட், தேங்காய் - 1, மிக்ஸ்ட் காய்கறிகள் - 1 பாக்கெட் ஆகிய பொருட்களுடன் முட்டை - 10, இறைச்சி - 500 கிராம், ரெக்கப் பணம் - 20 ரூபாய் சேர்த்து வழங்கப்பட உள்ளது.
கேமாரா உதவி: தைக்கா ஹாஜா
நன்றி; my pno

No comments:

Post a Comment