
தாக்குதலை அடுத்து நடந்த நெடுநேர துப்பாக்கி சண்டையில் ஆயுததாரிகள் எட்டு பேரும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக பாகிஸ்தானிய தாலிபான் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
இவ்விமானப்படைத் தளத்தில் குறைந்தது முப்பது போர் விமானங்கள் இருந்தன. இவற்றில் ஒரு விமானம் மட்டுமே தாக்குதலில் சேதமடைந்தது.
பாகிஸ்தானின் இராணுவ தளங்களை இலக்குவைத்து தாலிபான் அமைப்பினர் அண்மைய சில ஆண்டுகளாகவே வரிசையாக தாக்குதல்களை நடத்திவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment