click me

Friday, August 17, 2012

அமைச்சர் நாராயணசாமிக்கு நீதிமன்றம் கண்டனம்


கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அணு உலை தொடங்கும் தேதியை அறிவித்ததாக, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
நாராயணசாமிகூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ள நிலையில், தடையில்லாச் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும் போது கூடங்குளம் அணு உலை தொடங்கும் தேதியை அறிவித்ததாக மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கூடங்குளம் அணு உலையை இயக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது எவ்வாறு என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அணு உலையை இயக்குவது குறித்து தேதியை அறிவித்தது குறித்து மத்திய, மாநில அரசுகள் வரும் 21ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment