click me

Friday, August 17, 2012

சிகரெட் விற்பனைக்கு ஆஸ்திரேலியவில் கிடுக்கிப்பிடி


ஆஸ்திரேலியாவில் புகையிலை நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் சிகரெட்டுகளை எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல் பெட்டியில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அரசின் உரிமையை நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது
ஆஸியில் இனி சிகரெட் பெட்டிகள் இப்படித்தன் 
அரசின் புதிய சட்டத்தின் மூலம், அங்கு அனைத்து புகையிலை நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் சிகரெட் பெட்டிகள் மீது தமது நிறுவனங்களின் முத்திரையையோ அல்லது அந்த சிகரெட்டின் பெயரையோ குறிப்பிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இனி இப்படி விற்க முடியாது
அதற்கு பதிலாக, இந்த ஆண்டின் இறுதியிலிருந்து அனைத்து சிகரெட்டுகளும் வெறும் ஆலிவ் பச்சை வண்ணத்தில் உள்ள பெட்டிகளில், உடல் நலம் குறித்த எச்சரிக்கையை தாங்கிவரும் செய்தி மட்டுமே அச்சிடப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம்
நாட்டில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆஸ்திரேலிய அரச அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசின் இப்படியான நடவடிக்கை தங்களது வியாபாரத்தை பாதிக்கும் என்றும் புகையிலை வர்த்தகத்தில் ஈடுபடும் பெரு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா போன்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்கும்?
உலகளவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் சிகரெட்டை பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் நடவடிக்கையை எடுக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா வந்துள்ளது.
இதையடுத்து பிரிட்டன், நார்வே, இந்தியா, கனடா உட்பட பல நாடுகள் இதே போன்று விளம்பரமில்லாத வகையில், பெட்டிகளில் சிகரெட்டை விற்பனை செய்யப்படுவதை பரிசீலித்து வருகின்றன.
பல நாடுகள் இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

No comments:

Post a Comment