click me

Friday, August 17, 2012

இந்தியாவில் முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி

இந்தியாவில் முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பகல்- இரவு போட்டியாக இந்தியாவில் முதன் முறையாக நடத்தப்பட உள்ளது.
கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் ஆகிய 3 நிலைகள் உள்ளன. 3 மணி நேரம் நடைபெறும் டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
டி20 போட்டியின் வருகையால் 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. இதனால் டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சில காலங்களில் டெஸ்ட் போட்டி அழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியை பாதுகாக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ரசிகர்களை கவரும் வகையில் டெஸ்ட் போட்டியை பகல்- இரவாக நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளது. அதன்படி பகல்-இரவு டெஸ்ட் போட்டியை இந்தியாவில் முதன்முறையாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் சட்ட மேதை என்று
கருதப்படும் எம்.சி.சி (மெர்லிபோன் கிரிக்கெட் கிளப்) பகல்- இரவு டெஸ்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அந்த கிளப்பின் வருடாந்திர கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை அதிகமாக பார்க்கும் இந்தியாவில் டெஸ்டை நேரில் பார்க்கும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவில் பகல்- இரவு டெஸ்டை முதலில் நடத்தலாம் என்று எம்.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களில் பகல்- இரவு டெஸ்ட் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை சீருடையில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. இளம் சிவப்பு கலரில் பந்து பயன் படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்யும் முறையை (டி.ஆர்.எஸ்) அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்.சி.சி. தெரிவித்துள்ளது.
மேலும்ட, டி.ஆர்.எஸ் முறைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment