click me

Friday, August 17, 2012

நியூசிலாந்து தொடருக்காக கடும் பயிற்சியை தொடங்கினார் சச்சின்


  • நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியை தொடக்கினார்.
    இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் (ஆகஸ்ட் 23ம் தேதி முதல் செப்டெம்பர் 11ம் தேதி வரை), 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் வரும் ஓகஸ்ட் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடக்கிறது.
    இதனிடையே, ஐந்தாவது ஐ.பி.எல் தொடருக்குப் பின்பு, இந்திய வீரர் சச்சின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வேண்டும் என்பதற்காக, சச்சின் தானாக விலகினார். தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்.
    இதற்காக, நேற்று காலை சச்சின் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்.சி.ஏ.,) வந்து அங்குள்ள பிசியோதெரபிஸ்டிடம் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.
    பின்பு, வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில், சச்சின் துடுப்பாட்ட பயிற்சி செய்தார். கடந்த சில நாட்களாக இங்கு பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஜாகிர் கானை அழைத்து, தனக்கு பந்து வீசுமாறு கூறி, பயிற்சி செய்தார்.

No comments:

Post a Comment