click me

Friday, August 17, 2012

Multiple Accounts Login page: பல்வேறு கூகுள் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வசதி

கூகுளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு Multiple-sign in என்ற வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதை மேலும் சுலபப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும்.
அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயனர் பெயர், கடவுச் சொல் தர வேண்டிய அவசியமில்லை.
ஆக்டிவேட் செய்ய:
இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் இந்த பக்கத்திற்கு சென்று அதில் உள்ள enable this feature என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான மற்ற கூகுள் கணக்குகளை Add account கிளிக் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கணக்கில் உள் நுழையும் பொழுதும் Stay signed in என்ற கட்டத்தில் டிக் குறியிடுவது அவசியம்.
இதே போன்று உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளையும் சேர்த்து கொள்ளுங்கள்.
இனி ஒவ்வோரு முறையும் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை.

No comments:

Post a Comment