ஈரோடு: முதலீட்டாளர்களிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்த ஈரோட்டைச் சேர்ந்த நிதி ஈமு பண்ணை உரிமையாளர் பழனிச்சாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈமு பண்ணையில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ஊக்கத்தொகை, போனஸ் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களை ஈர்த்தனர் பண்ணை உரிமையாளர்கள்.
ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமு பண்ணைகள் உள்ளன. இவற்றில் முதன்மையான சுசி ஈமு பண்ணை உரிமையாளர்களின் மோசடியை அடுத்து முதலீட்டாளர்கள் பலரும் தாங்கள் முதலீடு செய்துள்ள ஈமு பண்ணைகளின் தலைமை அலுவலகங்களுக்குச் சென்று முதலீட்டுப் பணத்தை கேட்டு வருகின்றனர்.
இதனால் பல உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிதி ஈமு பண்ணையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பணத்தை மோசடி செய்துவிட்டதாக முதலீட்டாளர்கள் பலரும் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நிதி ஈமு பண்ணை உரிமையாளர் பழனிச்சாமியை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment