click me

Tuesday, August 14, 2012

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் காலமானார்


விலாஸ்ராவ் தேஷ்முக்கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 67.விலாஸ்ராவ் தேஷ்முக்
கடந்த 6-ம் தேதி, மும்பையில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயார்படுத்தி வந்தனர் இந்நிலையில், தேஷ்முக்கிற்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானம் செய்ய இருந்த நபர் இன்று அதிகாலை திடீரென காலமானார். 31 வயதான அந்த ஓட்டுநர், சாலை விபத்து ஒன்றில் சிக்கியதில், அவரது மூளை செயலிழந்துவிட்டது. அரசு மருத்துவமனை ஒன்றில் இருந்த அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றவிருந்த நிலையி்ல் அவர் உயிரிழந்தது, தேஷ்முக்கிற்கு பெரும் பின்னடைவாகிவிட்டது. இதையடுத்து, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானத்துக்காக மீண்டும் தேடுதல் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக், இரண்டு முறை மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார்.
கிராம சபைத் தலைவர் பதவியில் இருந்து மாநில முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர் தேஷ்முக்.
அவரது மறைவுக்கு, பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment