click me

Tuesday, August 14, 2012

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே 'இன்பார்ம்' பண்ணுங்க... நாசாவுக்கு ஒபாமா கோரிக்கை!


 If You Find Martians Let Me Know Right Away Obama Nasa ஏர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம் என்றும் வர்ணித்துள்ளார் ஒபாமா வர்ணித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒபாமா இடையில் அயோவா மாகாணத்தில் தரையிறங்கினார். அப்போது அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி கலிபோர்னியாவில் உள்ள நாசாவின், ஜெட் புரபல்சன் ஆய்வகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடினார். அப்போதுதான் இதைத் தெரிவித்தார் அவர்.
விஞ்ஞானிகளிடம் ஒபாமா பேசுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏதேனும் உயிரினம் இருப்பதை கியூரியாசிட்டி கண்டுபிடித்தால், அது குறித்த தகவல் கிடைத்தால் உடனே எனக்குச் சொல்லுங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அது மிகப் பெரிய கண்டுபிடிப்பாக, உலகுக்கு மிகப் பெரி செய்தியாக அமையும்.
எத்தனையோ பணிகளில் நான் பிசியாக இருக்கிறேன் என்றாலும், எனக்கு இந்த செய்திதான் மிகப் பெரிய விஷயமாக அமையும்.

No comments:

Post a Comment