click me

Saturday, August 18, 2012

INDONESIA நிலநடுக்கம்; சுனாமி ஏற்பட வாய்ப்பு?


பலு: இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலி 6.6 ஆக பதிவாகியுள்ளதால் மக்கள் சுனாமி பீதியில் உறைந்துள்ளனர்.
சுலவேசி தீவில் உள்ள பலு நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருப்பதால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் சேதவிபரம் பற்றி இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்தோனிசியாவில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் சுனாமி பீதியில் உறைந்து போயுள்ளனர்.

No comments:

Post a Comment