click me

Saturday, August 18, 2012

PAKISTHAN இல் ஆளில்லா விமான குண்டுவீச்சில் 6 பேர் பலி


பாகிஸ்தானில் ஆப்கானுடனான எல்லையை ஒட்டியிருக்கின்ற பழங்குடியினப் பகுதியான வடக்கு வாசிரிஸ்தானில் அமெரிக்கர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானம்அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகக் கருதப்படும் இடங்களில் இரண்டு ஏவுகணைகளை வீசியிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் பகுதியளவில் சுயாட்சி அதிகாரம் பெற்ற இப்பிராந்தியத்தில் முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

தற்கொலை தாக்குதல்

இதனிடையே நாட்டின் தென்மேற்கிலுள்ள குவெட்டா நகரில் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் கார் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிசார் கூறுகின்றனர்.
தாக்குதலாளி வந்த கார் சோதனைச் சாவடி ஒன்றில் நிறுத்தப்பட்டபோது அவர் குண்டை வெடிக்கச் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலுசிஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரமான குவெட்டாவில் ஷியா சிறுபான்மையினரை இலக்குவைத்து வன்முறைகள் நடந்துவருகின்றன. பிரிவினைவாதக் கிளர்ச்சியும் இப்பிராந்தியத்தில் மேலோங்கிவருகிறது.

No comments:

Post a Comment